M K Stalin

இது எடுபிடி ஆட்சி, அதற்கு எடப்பாடியே சாட்சி-மு.க.ஸ்டாலின் பரப்புரை

மதுரை மக்களவை தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து, மதுரை வண்டியூர் சுற்றுச்சாலையில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மதுரை மக்களவை தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து, மதுரை வண்டியூர் சுற்றுச்சாலையில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.அதில் ,

1980ல் மதுரை ஜான்சிராணி பூங்காவில் இளைஞரணியை கலைஞர் துவக்கினார். அதே இடத்தில் 29 ஆண்டுகள் கழித்து கட்சி தலைவராக வாக்குச் சேகரிக்க வந்துள்ளேன். மோடியின் ஆட்சியை அகற்றி நாடு விடுதலை பெற வேண்டும் என்பதற்காகவே இந்த பிரச்சார கூட்டம் நடைபெறுகிறது.கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் தடையின்றி நடைபெற நிதி ஒதுக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

கீழடி அகழாய்வு நடைபெற முக்கிய பங்கு வகித்தவர் வேட்பாளர் சு.வெங்கடேசன். இவர் போன்ற எழுத்தாளர் நாடாளுமன்றத்திற்கு அனுப்பினால் எங்களுக்கு மட்டுமல்ல. தொகுதி மக்களாகிய உங்களுக்கும் பெருமையாக இருக்கும். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் மட்டுமே நாட்டப்பட்டது. ஆனால் இதுவரை பணம் ஒதுக்கப்படவில்லை. நிதி ஒதுக்க மோடி மறந்து விடுவார். பாரதிய ஜனதா ஆளும் உத்திரப்பிரதேசத்திற்கே எய்ம்ஸ்க்கு முறையாக பணம் ஒதுக்காத மோடி தமிழக எய்ம்ஸ்க்கு எப்படி நிதி ஒதுக்குவார்?

மதுரைக்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது? என கேள்வி எழுப்பினார். தாயுள்ளத்தோடு கலைஞர் ஆட்சி நடத்தினார். ஆனால் எடப்பாடி பேய் ஆட்சி நடத்தி வருகிறார். 45 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வேலை வாய்ப்பின்மை 6.1 சதவீதமாக உயர்ந்துள்ளாக தேசிய மாதிரி ஆய்வில் தெரிய வந்துள்ளது. மோடி செய்தது மோசடி என்பதால் அவரை மோடி என்று அழைக்க வேண்டாம். மோசடி மோடி என்று அழையுங்கள். மோடி ஆட்சியில் இந்தியா வளர்ச்சியடையவில்லை; தளர்ச்சியடைந்துள்ளது. 5.18 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை மோடி ஆட்சியில் 6.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

https://www.facebook.com/kalaignarnewsofficial/videos/380351216029897/

மு.க.ஸ்டாலின் , அவர்களுக்கு நண்பர் ஒருவர் அனுப்பிய கவிதையை மேடையில் படித்து காண்பித்தார்,

இது பொல்லாத ஆட்சி, அதற்கு பொள்ளாச்சியே சாட்சி

இது துப்புக்கெட்ட ஆட்சி, அதற்கு தூத்துக்குடியே சாட்சி

இது தரிசாக்கும் ஆட்சி, அதற்கு நெடுவாசலே சாட்சி

இது மனுதர்ம ஆட்சி, அதற்கு நீட் தேர்வே சாட்சி

இது பாலைவன ஆட்சி, அதற்கு மேகதாதுவே சாட்சி

இது ஊழல் ஆட்சி, அதற்கு ரஃபேலே சாட்சி

இது நாணயங்கெட்ட ஆட்சி, அதற்கு செல்லாத நோட்டே சாட்சி

இது கொள்ளைக்கார ஆட்சி, அதற்கு ஜிஎஸ்டியே சாட்சி

இது மதவெறி ஆட்சி, அதற்கு மாட்டுக்கறியே சாட்சி

இது கொலைகார ஆட்சி, அதற்கு கொடநாடே சாட்சி

இது வாயில் வடைசுடும் ஆட்சி, அதற்கு மோடியே சாட்சி

இது எடுபிடி ஆட்சி, அதற்கு எடப்பாடியே சாட்சி.

இவ்வாறு பேசினார்.