M K Stalin
20 ஆம் தேதி திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கும் மு.க.ஸ்டாலின்
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதன் 2வது கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் - 10, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
இந்நிலையில் திருவாரூரில் வரும் 20ஆம் தேதி தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், முழுமையான பிரச்சார சுற்றுப்பயணம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
* மார்ச் 20 - நாகை, திருவாரூர், தஞ்சை
* மார்ச் 21 - பெரம்பலூர்
* மார்ச் 22 - சேலம்
* மார்ச் 23 - தருமபுரி
* மார்ச் 24 - திருவண்ணாமலை
* மார்ச் 25 - காஞ்சிபுரம்
* மார்ச் 26 - திண்டுக்கல்
* மார்ச் 27 - தேனி
* மார்ச் 28 - மதுரை, விருதுநகர்
* மார்ச் 29 - சிவகங்கை, ராமநாதபுரம்
* மார்ச் 30 - கிருஷ்ணகிரி
* மார்ச் 31 - வேலூர்
* ஏப்ரல் 1 - அரக்கோணம், தென்சென்னை
* ஏப்ரல் 2 - நீலகிரி
* ஏப்ரல் 3 - திருப்பூர், கோவை
* ஏப்ரல் 4 - பொள்ளாச்சி, ஈரோடு
* ஏப்ரல் 5 - கரூர், கள்ளக்குறிச்சி
* ஏப்ரல் 6 - விழுப்புரம், ஆரணி
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?