கல்வி & வேலைவாய்ப்பு
“நீங்க படிக்கும் ஒவ்வொரு வார்த்தையுமே திசைகாட்டிதான்.. என்ன புத்தகங்கள் படிக்கலாம்?” : சிறப்புக் கட்டுரை!
என்ன புத்தகங்கள் படிக்கலாம்?
அரசியலோ புனைவோ வாசிப்பை தொடங்க திசைகாட்டிகளும் வழிகாட்டிகளும் கிடையாது. கிட்டத்தட்ட நீருக்குள் தள்ளிவிட்டு நீச்சல் அடிக்க கற்றுக் கொள்ள சொல்லும் பாணி. வேர்க்கடலை பொட்டல காகிதம் தொடங்கி எதையும் எல்லாவற்றையும் படிக்கலாம். நீங்கள் படிக்கும் ஒவ்வொரு வார்த்தையுமே திசைகாட்டிதான்.
மேலும் tailor made உடை போடலாம். கச்சிதமாக இருக்கும். உணவையும் tailor made ஆக உண்ண முடியுமா? உணவு நம் ரசனை சார்ந்தது. ருசி மற்றும் விருப்பம் சார்ந்தது. இல்லையா? படங்களை tailor made ஆக பார்க்க முடியுமா? மனிதர்களை tailor made ஆக தேர்ந்தெடுத்து பழக முடியுமா? ஒவ்வொரு மனநிலை சார்ந்து ஓர் உணவும் ஒரு படமும் ஒரு நண்பரும் என தேர்வு செய்கிறோம் அல்லவா?
எல்லா உணவுகளையும் தேடி உண்ணுவோரை foodie என்கிறார்கள். படங்கள் அதிகம் பார்ப்போரை movie buff என்கிறார்கள். வாசிப்பும் தொடக்கத்தில் அது போல இருப்பது நல்லது. அதிகமாக வாசிக்க வாசிக்க உங்களின் வாசிப்பு உங்களுக்கான அரசியல் எழுத்துகள் நோக்கி செலுத்தும்.
புத்தகச் சந்தை நடக்கிறது. செல்லுங்கள். ஒவ்வொரு ஸ்டாலுக்கும் செல்லுங்கள். அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் மீது பார்வை ஓட்டுங்கள். ஏதேனும் ஓர் அட்டைப்படமோ தலைப்போ உங்களை ஈர்க்கும். அந்த ஈர்ப்புக்கு காரணம் அதுவே உங்களின் மனம் என அறிக.
அந்த புத்தகத்தை புரட்டி பாருங்கள். நூல் குறிப்பு, ஆசிரியர் குறிப்பு, உள்ளடக்கம் போன்றவற்றை மேயுங்கள். மேலதிகமாக ஈர்க்கப்பட்டால் வாங்குங்கள். அப்படி ஈர்க்கப்படும் புத்தகங்கள் எல்லாவற்றையும் வாங்குங்கள். செலவுதான். எனினும் வாங்குங்கள்.
வாங்கிய புத்தகங்கள் நீங்கள் எதிர்பார்த்த அளவு இல்லாமல் இருக்கலாம். சுவாரஸ்யமற்று இருக்கலாம். அலுப்பு தரலாம். வீணாக வாங்கி விட்டோம் என்று கூட தோன்றலாம். பிரச்சினை இல்லை. அந்த புத்தகத்தின் அலுப்பு, சுவாரஸ்யமின்மை, விரயம் யாவும் உங்கள் மனதில் இருப்பவை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
குறைந்தபட்சம் உங்கள் மனம் கொண்டிருக்கும் அந்த கூறுகளும் அப்புத்தகங்களை போலவே விரயம், சுவாரஸ்யமற்றது, அலுப்பு நிறைந்தது எனப் புரிந்து கொள்ள அந்த புத்தகங்கள் பயன்படும். புத்தகங்கள் தேர்ந்தெடுக்க அடிப்படை உரையாடல். வாசிப்பு பழக்கம் கொண்ட நபருடன் உரையாடுங்கள். தொடர்ந்து உரையாடுங்கள். அவர் சொல்லும் பல விஷயங்களை அவதானியுங்கள். அவர் அடைந்த புரிதலுக்கு காரணமான புத்தகங்களை, ஆளுமைகளை அவரே சொல்லுவார். தேடி வாங்குங்கள்.
புனைவுலகுக்குள் செல்லாமல் அரசியல் புத்தகம் படிப்பவர்கள் வறட்டுத்தனம் கொள்வார்கள் என்பது என் நம்பிக்கை. எனவே புனைவின் வழி அரசியல் கண்டெடுக்கும் புத்தகங்களை தேர்வு செய்யலாம். அதே நேரத்தில் வாசிப்பில் தொலைந்து அப்புத்தக எழுத்தாளராய் மாறிவிடாதீர்கள்.
Also Read
-
டெல்லி காற்று மாசு: “அதிகரிக்கும் வரை என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?” -ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
-
”மணிப்பூர் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு CPM வலியுறுத்தல்!
-
இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் : இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரியா தேர்வு : விவரம் என்ன ?
-
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு - ஒருவர் உயிரிழப்பு!: மணிப்பூரில் தொடரும் பா.ஜ.க.வின் அட்டூழியம்!
-
“அதானிக்கு ஆதரவான திட்டங்களை ரத்து செய்வோம்...” - மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே உறுதி !