India
நின்ற இராணுவ வீரரின் துடிப்பு... 2 மணி நேரம் போராடி உயிர்ப்பித்த AIIMS மருத்துவர்கள்.. குவியும் பாராட்டு!
ஒடிசா மாநிலம் நாயகர் பகுதியில் அமைந்துள்ள ஒடபாலா என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சுபகந்த் சாஹு (24). இராணுவ வீரரான இவருக்கு கடந்த அக்.1-ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை முதலில் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் குடும்பத்தினர்.
ஆனால் அந்த மருத்துவமனை மருத்துவர்கள் கைவிரித்தால் ஒடிசாவின், புவனேஸ்வர் (புபனேஸ்வர்) AIIMS மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இதயத்துடிப்பு செயலிழந்ததை கண்டறிந்து உடனடியாக சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவரது இதயம் மீண்டும் துடிக்காத நிலையில், எக்ஸ்ட்ரா கார்போரல் கார்டியோபுல்மோனரி ரெசசிட்டேஷன் எனப்படும் eCPR முறையில் சிகிச்சை அளித்தனர்.
தொடர்ந்து சுமார் 40 நிமிடம் அளிக்கப்பட்ட சிகிச்சையில் இளைஞர் சுபகந்த் சாஹு உயிர் பிழைத்தார். இதனையடுத்து சுபகந்த் இதய துடிப்பு 96 மணி நேரத்தில் சீரானது. இந்த நிகழ்வு தற்போது வெளியே வந்து அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
இதுகுறித்து அவருக்கு சிகிச்சை அளித்த தீவிர சிகிச்சை பிரிவு நிபுணரான டாக்டர் ஸ்ரீகாந்த் கூறுகையில், "மிகவும் சீரியஸ் கண்டிஷனில் இளைஞர் சுபகந்த் சாஹு, புவனேஸ்வர் AIIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கும்போதே இதயத்துடிப்பு செயலிழந்தது. அப்போது எங்கள் முன் 2 வழிகள்தான் இருந்தது. ஒன்று அவர் இறந்துவிட்டார் என்று அறிவிப்பது; இன்னொன்று, eCPR முறையில் முயற்சித்துப் பார்ப்பது.
அதன்படி நாங்கள் இரண்டாவது வழியான eCPR முறையில் சிகிச்சை அளித்தோம். தொடர்ந்து 40 நிமிடம் அளித்த சிகிச்சையில் 2 மணி நேரம் துடிப்பே இல்லாமல் இருந்த அவரது இதயம் மீண்டும் செயல்பட தொடங்கியது அவரது இதயம் மீண்டும் துடிக்க தொடங்கியது. இது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இதனையடுத்து சுபகந்த் இதய துடிப்பு 96 மணி நேரத்தில், சீரானது. இது ஒரு மைல்கல். நோயாளியின் இதயம் துடிப்பு நின்று, 120 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது நாட்டில் அரிதான நிகழ்வுகளில் ஒன்றாகும்." என்றார்.
மூச்சின்றி இருந்த இராணுவ வீரரை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி மீண்டும் உயிர்ப்பித்து சாதனை புரிந்துள்ள AIIMS மருத்துவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.
Also Read
-
”சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது” : LIC இந்தி திணிப்பு - துணை முதலமைச்சர் உதயநிதி ஆவேசம்!
-
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழ்நாட்டிற்கு கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை மையத்தின் எச்சரிக்கை என்ன?
-
'திராவிட மாடல்’ ஆட்சிக்கு நிதி ஆயோக் பாராட்டு : மாநில உரிமைகளுக்கான உரிமைக் குரல் ! - கி.வீரமணி !
-
LIC விவகாரம்: “இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்தும் பாஜகவுக்கு எதிராக போராடும் நிலை வரும்” - வைகோ எச்சரிக்கை!
-
"இந்தி மொழி கொடுங்கோன்மையை ஒன்றிய அரசு உடனே நிறுத்தவேண்டும்" - முதலமைச்சர் கண்டனம் !