India
“வீடு என்பது ஒரு நபரின் தனிப்பட்ட சொத்து அல்ல!” : பா.ஜ.க.வின் புல்டோசர் ஆட்சிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!
ஆர்.எஸ்.எஸ் கருத்தியலை பின்பற்றும் பா.ஜ.க, தாம் ஆட்சி செய்கிற உத்தரப் பிரதேசம், குஜராத், அரியானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் புல்டோசர் அரசை வலுவாக கட்டமைத்து வருகிறது.
சிறுபான்மையினர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டால் போதும், குற்றம் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்ற முன்மொழிவுடன் ஆயிரக்கணக்கான வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி வருகிறது மாநில பா.ஜ.க அரசுகள்.
இந்த புல்டோசர் நடைமுறைகளில், சிறுபான்மையினர் வீடுகள் இடிக்கப்படுவது மட்டுமல்லாமல், இஸ்லாமிய கல்விச்சாலைகள், மத ஆலயங்கள் என பல கட்டடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
அதில், இந்திய தலைநகர் டெல்லிக்கும் விலக்கில்லை. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியே ஆட்சி செய்து வருகின்ற போதும், டெல்லியின் காவல்துறை உள்ளிட்ட பல துறைகள் ஒன்றிய பா.ஜ.க அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவதே இதற்கு காரணமாய் அமைந்துள்ளது.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு, இன்று (நவம்பர் 13) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அதில், “வீடு என்பது ஒரு நபரின் தனிப்பட்ட சொத்து அல்ல. குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் வாசிக்க கூடிய இடம்.
ஒருவர் குற்றவாளி என்பதால் குடும்பத்தின் அனைவருக்கும் கூட்டுத் தண்டனை அளிப்பதை அனுமதிக்க முடியாது.
அதனை இடிக்கும் முன்னதாக குடும்ப உறுப்பினர்கள் தங்குமிடத்தை பறிப்பது என்கிற தீவிர நடவடிக்கை தேவையா என்பதை அரசு பரிசீலிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற உச்சநீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து உத்தரவிட்டுள்ளது.
“ஆக்கிரமிப்பு உரிமையாளருக்கு 15 நாட்களுக்கு முன்னதாக நோட்டீஸ் வழங்க வேண்டும். உரிய பதிலளிக்காவிட்டால் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கலாம் அதனை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்.
உச்ச நீதிமன்ற வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாத அதிகாரிகள் மீது துறை வாரியான நடவடிக்கை எடுப்பதோடு நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் பதிவு செய்யப்படும்” என வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!