India
Phone Pe செயலியை பயன்படுத்தி மோசடி : சம்மந்தப்பட்ட நிறுவனங்களை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு !
பணபரிவர்த்தனை செயலியை தவறாக பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி போன்-பே நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அதில், தங்கள் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி சிலர் பணபரிவர்த்தனைகள் செய்து தங்கள் நிறுவனத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதால், பண மோசடி செய்யும் நிறுவனத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
அது போன்ற நிறுவனங்களை உடனடியாக கண்டறிந்து தொடர்ந்து மோசடி நடக்காமல் முடக்குவதுடன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஒன்றய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மோசடி செய்யும் நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
அதே நேரம் ஆரம்பகட்டத்தில் மோசடி செய்யும் நிறுவனத்தை கண்டறிந்து முடக்க முடியாது. எந்த நிறுவனம் பண மோசடியில் ஈடுபட்டது என உறுதி செய்யப்பட்டதும் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எந்த நிறுவனத்தால் பாதிப்பு என போன்-பே நிறுவனம் இ-மெயில் மூலமாகவும் புகார் அளித்தால் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மோசடி குறித்து சம்பந்தப்பட்ட பணபரிவர்த்தனைக்கான யூ.ஆர்.எல் கணக்கு ஐடியை ஒன்றிய அரசுக்கு போன்-பே நிறுவனம் வழங்க வேண்டும். அந்த ஐடியின் மீது தொடர்ந்து பண பரிவத்தனை செய்யாத வகையில் முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
Also Read
-
”பா.ஜ.கவில் ஆதாயம் கிடைக்கும் ஆசையில் பேசும் கஸ்தூரி” : நடிகர் எஸ்.வி சேகர் கண்டனம்!
-
சிட்னி நகரில் 67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு - AI குறித்து உரையாற்றினார் அப்பாவு !
-
தந்தை பெரியார் நூலகம் – அறிவியல் மய்யம் : முதலமைச்சர் அறிவிப்புக்கு கி.வீரமணி வரவேற்பு!
-
சட்டவிரோதமாக வீடுகளை இடிக்கும் உத்தரப் பிரதேச பா.ஜ.க அரசு! : உச்சநீதிமன்றம் அபராதம் விதித்து கண்டனம்!
-
தனியார் தொலைக்காட்சியில் அசத்திய கரூர் அரசுப் பள்ளி மாணவி... குவியும் பாராட்டு ! - யார் அவர்?