India
கேரளாவில் ரயில் மோதி தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் பலி!
கேரளாவின் சொர்னூர் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி - திருவனந்தபுரம் கேரள எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மதியம் கொச்சின் பாலத்தை கடந்தது.
அப்போது, ரயில் பாதையில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 4 தொழிலாளர்கள் மீது ரயில் மோதியது. இதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் அனைவரும் தமிழ்நாடு மாநிலம், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணி, வள்ளி, லஷ்மணன் என தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் ஒருவரின் உடல் ஆற்றில் விழுந்ததால், தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் நடந்த போது, பத்து தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். ரயில் வருவதை அறிந்த 6 பேர் தண்டவாளத்தில் இருந்து வெளியே ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து சேலம் மாவட்டத்தை சேர்ந்த 4 குடும்பங்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ரயில் பாதை பராமரிப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.
சமீப காலமாக நாட்டில் ரயில் விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது ரயில்வே பாதுகாப்பு முறைகளில் குறைபாடுகள் இருப்பதைக் காட்டுவதாக குற்றம் சாட்டி உள்ள பொதுமக்கள், ஒன்றிய அரசு இதுபோன்ற விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
Also Read
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!