India
குற்றவாளிக்காக காவல்நிலையத்தில் ஸ்டூடியோ வசதி : பஞ்சாப் காவல்துறைக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் !
மும்பையில் அஜித்பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை அடையாளம் தெரியாதநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து பிரபல நடிகர் சல்மான் கானுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இது இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பின்னணியில் பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இருந்தது தெரியவந்தது.
வழக்கு ஒன்றுக்காக கைதுசெய்யப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய், குஜராத் சிறையில் இருந்துகொண்டே இந்தியா முழுவதும் தனது கும்பல்களை இயக்கிவருகிறார். இந்த நிலையில், லாரன்ஸ் பிஷ்னோய் பேட்டிகொடுக்க காவல் நிலையத்தில் ஸ்டூடியோ வசதியை ஏற்படுத்திக்கொடுத்த காவல்துறையின் செயலுக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பஞ்சாப் சிறையில் இருந்தபோது டி.வி சேனல் ஒன்றுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் பேட்டி அளித்திருந்தார். இது நேரலையில் ஒளிபரப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது.
இந்த வழக்கில், லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் மொபைல் போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்த போலீஸ் அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். மேலும் இந்த பேட்டிக்காக காவல் நிலையத்தில் ஸ்டூடியோ வசதியை ஏற்படுத்திக்கொடுத்த காவல்துறையின் செயலும் அம்பலமானது. இதன் காரணமாக இது குறித்து புதிய சிறப்பு விசாரணைக்கு குழு விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!