India
இந்தியா - சீனா எல்லையில் இனிப்பு பரிமாற்றம்!
இந்தியா - சீனா எல்லை என்றாலே, பதற்றம் நிகழும் பகுதி என்று நினைவிற்கு வரும் அளவிற்கு, கடந்த 4 ஆண்டுகால நிகழ்வுகள் அமைந்து வந்தன.
இந்நிலையில், அப்பதற்றம் சில நாட்களுக்கு முன் நடந்த பேச்சுவார்த்தையின் வழி, சற்று குறைந்து, சில அமைதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, தீபஒளித் திருநாளில் இரு நாடுகளிடையே அமைதி நிலைகொண்டுள்ளது என்பதை எடுத்துரைக்கும் வகையில், இன்று (அக்டோபர் 31) இந்தியா - சீனா எல்லையில், இரு நாட்டின் இராணுவ வீரர்களும் இனிப்புகளை பரிமாற்றிக்கொண்டனர்.
இச்செய்தி, இணையத்தில் வெகுவாக பகிரப்பட்டு, பெருவாரியான மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. இவ்வொற்றுமை நீடிக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
Also Read
-
நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிப்பா?... பழனிசாமிக்கு தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் ஆர்.காந்தி !
-
”மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி” : ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்து சொன்ன CM MK Stalin!
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !