India
'ஜெய் ஸ்ரீராம்' கோசமெழுப்ப மறுத்த பெண் : மருத்துவமனையில் மறுக்கப்பட்ட உணவு : வீடியோ வெளியாகி அதிர்ச்சி !
மும்பையில் உள்ள டாட்டா மருத்துவமனையின் வெளியே NGO-வை சேர்ந்தவர்கள் இலவசமாக நோயாளிகளுக்கும் அவருடன் இருக்கும் உறவினர்களுக்கும் உணவு வழங்கியுள்ளனர். இதற்காக நீண்ட வரிசை ஒன்று நின்றுள்ளது.
அதில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவரும் வரிசையில் நின்றுள்ளார். பின்னர் அந்தப் பெண் உணவு வழங்கும் இடத்துக்கு வந்ததும் அவரைப் பார்த்து, உணவு வழங்குபர் 'ஜெய் ஸ்ரீராம்' என்று சொன்னால்தான் உணவு தருவோம் என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் அப்படி உச்சரிக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த உணவு வழங்குபவர் உணவு வழங்க முடியாது வரிசையில் இருந்து நகர்ந்து செல்லுமாறு அந்த பெண்ணை விரட்டி உள்ளார்.
இது குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ள நிலையில், பலரும் அந்த நபருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜக தொடர்ந்து செயல்படுத்தி வரும் இந்துத்துவம் பாமர மக்களிடையேயும் ஊடுருவியுள்ளது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தோனியை தக்கவைத்த CSK : 2025 IPL தொடரில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் அணி விவரம்!
-
Mayonnaise விற்பனைக்கு திடீர் தடை விதித்த தெலங்கானா அரசு காரணம் என்ன?
-
தவறை ஒப்புக்கொண்ட ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி! : தொடக்கத்தில் உண்மையை மறுத்தது ஏன்?
-
மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தி.மு.க MLA : நெகிழ்ச்சி சம்பவம் என்ன?
-
அமரன்: “கற்பனை Super Hero-க்களை பார்த்த குழந்தைகளுக்கு நிஜ Heroவை காட்டுங்கள்” - நடிகர் சிவகார்த்திகேயன்!