India
14 நாட்களில் 350 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
இந்தியாவில் இயக்கப்படும் விமானங்களுக்கு அடையாளம் தெரியாத நபர்களால் விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதில், பெரும்பாலான அச்சுறுத்தல்கள் சமூக ஊடகங்கள் மூலமாகவே வெளியிடப்படுகின்றன. அவ்வகையில், கடந்த 14 நாட்களில், இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு புரளி வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமையான (அக்டோபர் 27) இன்று மட்டும், இண்டிகோ நிறுவனத்தின் 18 விமானங்கள், விஸ்டாரா நிறுவனத்தின் 17 விமானங்கள் உள்ளிட்ட சுமார் 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று, அச்சுறுத்தல் காரணமாக குறைந்தது இரண்டு இண்டிகோ விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
விமானம் 6E 133 (புனேயில் இருந்து ஜோத்பூருக்கு) அகமதாபாத்திற்கும், 6E 87 (கோழிக்கோட்டில் இருந்து தம்மம்) மும்பைக்கும் திருப்பி விடப்பட்டதாக விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இண்டிகோ அறிக்கையின்படி, 6E 11 (டெல்லி-இஸ்தான்புல்), 6E 92 (ஜெட்டா-மும்பை), 6E 112 (கோவா-அகமதாபாத்), 6E 125 (பெங்களூரு-ஜார்சுகுடா), 6E 127 (6E 127) அமிர்தசரஸ்-அகமதாபாத்) மற்றும் 6E 135 (கொல்கத்தா-புனே) ஆகிய விமானங்கள் பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கைகளைப் பெற்றிருக்கின்றன.
இதர நிறுவனங்களின், 6E 149 (ஹைதராபாத் முதல் பாக்டோக்ரா), 6E 173 (டெல்லி முதல் பெங்களூரு), 6E 175 (பெங்களூரு முதல் டெல்லி), 6E 197 (ராய்ப்பூர் முதல் ஹைதராபாத்), 6E 248 (மும்பையிலிருந்து கொல்கத்தா), 6E 277 (அகமதாபாத்-லக்னோ) , 6E 312 (பெங்களூரு முதல் கொல்கத்தா), 6E 235 (கொல்கத்தா-பெங்களூரு) மற்றும் 6E 74 (ரியாத்-மும்பை) விமானங்களும் வெடிகுண்டு மிரட்டல்களுக்கு உள்ளாகியது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”அரசியல் செய்ய வேறு வழி இல்லையா ?” - தவறான தகவலை பரப்பிய ராமதாஸ்க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி !
-
விஜய் யாரை மகிழ்ச்சிப்படுத்த நினைக்கிறார்? : ஜவாஹிருல்லா கேள்வி!
-
சென்னையின் 4 ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விற்கப்படாது : தெற்கு ரயில்வே அறிவிப்பு !
-
30 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.40 லட்சத்து 55 ஆயிரம் நிதியுதவி : அசத்தும் தமிழ்நாடு அரசு!
-
”ஜனநாயகத்தை அழித்து வரும் மோடி அரசு” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!