India
ஒடிசா அருகே முழுவதுமாக கரையை கடந்தது ’டானா’ புயல் :120 கி.மீ வேகத்தில் வேசிய காற்று !
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல் நோக்கி நகர்ந்து புயலாக வலுப்பெற்றது.
இந்த புயலுக்கு "டானா" புயல் பெயரிட்டுள்ள நிலையில், இந்த புயல் ஒடிசா - மேற்குவங்கம் இடையே தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என்று கூறப்பட்டிருந்தது.மேலும் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரையை பூரி மற்றும் சாகர் தீவுகளுக்கு அருகில் பிதர்கனிகா மற்றும் டமாரா (ஒடிசா) இடையே கரையை கடக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
புயல் கரையை கடக்கும்போது, காற்றின் வேகம் மணிக்கு 100-110 கிமீ வேகத்தில் 120 கிமீ வேகத்தில் வீசும் என்று கூறப்பட்டிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அறிவிக்கப்பட்டபடியே டானா புயல், தீவிர புயல் என்ற நிலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கிய நிலையில் இன்று காலை 8.30 மணி அளவில் புயல் முழுவதுமாக கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நள்ளிரவு 1.30 முதல் 3.30 மணிக்கு உள்ளான நேரத்தில் புயலின் மைய பகுதி கரையை கடந்ததாகவும் அப்போது காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ வேகத்திலும் அவ்வப்போது 100 கி.மீ வேகத்திலும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்சமாக 120 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரையை கடந்தாலும் தற்போது புயல் நிலையில் டானா புயல், அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Also Read
-
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
-
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!
-
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
-
உக்ரைனின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றியது ரஷ்யா : போரில் தொடரும் ரஷ்ய ஆதிக்கம் !
-
மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!