India
பா.ஜ.க MLA-வை கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் : காரணம் என்ன?
கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பசன கௌடா பாட்டீல். இவர் அமைச்சர் தினேஷ் குண்டுராவின் மனைவி குறித்து சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதாவது,தினேஷ் குண்டுராவின் குடும்பத்தில் பாதி பாகிஸ்தான் உள்ளது என்று, அமைச்சர் மனைவி இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர் என்பதை குறிப்பிடும் வகையில் பேசியுள்ளார்.
இவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, மாநில மகளிர் ஆணையத்தில் அமைச்சர் தினேஷ் குண்டுராவின் மனைவி தபஸ்ஸம் ராவ் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு பெண்கள் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணைக்கு பசன கௌடா பாட்டீல் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதனைத் தொடர்ந்து பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் பசன கௌடா பாட்டீலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த வீரர், அதனாலதான் அவரால் இதனை செய்ய முடிகிறது - நாதன் லயான் புகழாரம் !
-
”சமஸ்கிருதம் படியுங்கள்” : பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்த பேராசிரியர் - நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழகம்!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் செய்தித்தொடர்பாளர் படுகொலை : இஸ்ரேல் அறிவிப்பு !
-
எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளன? : அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
-
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து : பயணிகள் அவதி... விவரம் என்ன ?