India
”நீதி வெல்ல வேண்டும்” : பாபா சித்திக் கொலைக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்!
மும்பையில் அஜித்பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை அடையாளம் தெரியாதநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்மல் நகர் பகுதியில் தனது மகனும், பாந்தரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. வுமானஜீஷான் வீட்டிற்கு வெளியே வந்தபோது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அவரை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பினர் என்று போலீஸார் தெரிவித்துள்ளது.
இந்த கொடூர சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், பாபா சித்திக்கின் மோசமான மரணம் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிப்பதாகவும், இந்தக் கடினமான நேரத்தில் தனது எண்ணங்கள் முழுமையாக அவரது குடும்பத்தைப் பற்றியே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதை இந்தப் பயங்கர சம்பவம் எடுத்துக்காட்டுகிறது என்றும், இந்தப் சம்பவத்திற்கு அரசு முழு பொறுப்பேற்க வேண்டும், நீதி வெல்ல வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.
Also Read
-
சென்னை MTC பேருந்துகளில் கட்டணமின்றி 20 கிலோ எடை வரை செல்லலாம்- எதற்கெல்லாம் கட்டணம்? முழு விவரம் உள்ளே !
-
”கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பு கூட்டுறவுத்துறை” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த வீரர், அதனாலதான் அவரால் இதனை செய்ய முடிகிறது - நாதன் லயான் புகழாரம் !
-
”சமஸ்கிருதம் படியுங்கள்” : பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்த பேராசிரியர் - நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழகம்!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் செய்தித்தொடர்பாளர் படுகொலை : இஸ்ரேல் அறிவிப்பு !