India
4ஆவது நாளாக டெல்லி லடாக் இல்லத்தில் தொடரும் உண்ணாநிலைப் போராட்டம்! : புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க!
இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை (6th schedule), பழங்குடி மக்களின் பகுதிகளை தன்னாட்சிப் பகுதிகளாக நிர்வகிக்கும் உரிமையை வழங்குகிறது.
அதன்படி, அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் மாநிலங்களில் உள்ள சுமார் 10 மாவட்டங்கள், தன்னாட்சி உரிமைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்திய நிலப்பரப்பின் வடமுனையில் இருக்கும் லடாக் பகுதியிலும் தன்னாட்சி உரிமைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்பது லடாக் மக்களின் நீண்டகால கோரிக்கையாக அமைந்துள்ளது.
அதன் படி, லடாக்கில் தன்னாட்சி உரிமை கேட்டு தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும், அதனை ஒன்றிய பா.ஜ.க அரசு புறக்கணித்து வந்தது. இந்நிலையில் டெல்லியில் அமைதியான வழியில் பேரணி செல்ல இருந்த லடாக் மக்களை இடைமறித்து, கைதும் செய்தது டெல்லி காவல்துறை.
இதனையடுத்து, பா.ஜ.க.வின் புறக்கணிப்பை எதிர்த்தும், லடாக்கிற்கு தன்னாட்சி உரிமை வழங்க வலியுறுத்தியும் சமூக ஆர்வலர் சோனம் வான்சுக் தலைமையில் லடாக் மக்கள், 4 ஆவது நாளாக டெல்லி லடாக் இல்லத்தில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும், ஒன்றிய பா.ஜ.க அரசு இதுவரை, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை முன்வராமல், தேர்தல்களிலேயே முழு கவனம் செலுத்தி வருகிறது.
Also Read
-
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
-
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!
-
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
-
உக்ரைனின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றியது ரஷ்யா : போரில் தொடரும் ரஷ்ய ஆதிக்கம் !
-
மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!