India

சிறையில் சாதிய பாகுபாடுகள் கூடாது! : உச்சநீதிமன்றம் உத்தரவு!

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களின் சிறைகளில் பட்டியலின, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த விளிம்பு நிலை மக்களை தாழ்த்தும் வகையில் வேலைகளை ஒதுக்கி, சாதிய பாகுபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலை தொடர்ந்து வருகிறது.

குறிப்பாக, எடுபுடி வேலைகளுக்கு என்று குறிப்பிட்ட சிலரை நியமிப்பது இந்திய அரசியலமைப்பிற்கு எதிரான வகையில் அமைந்துள்ளது என்ற வழக்கில், கண்டனத்துடன் தீர்ப்பு வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

இது குறித்து, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில்,

பட்டியலின, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த விளிம்பு நிலை மக்களை சிறைகளில் பாகுபாடுடன் நடத்தக்கூடாது.

தண்டனை குறைப்பு, சிறைகளில் சுத்தம்செய்வது, சமையல் செய்வது போன்ற பணிகளில் சாதி சார்ந்த பாகுபாடு காட்டக் கூடாது.

சாதி கட்டமைப்பால் விளிம்பு நிலை மக்கள் நுற்றாண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளனர். அது தற்போதும் தொடர்வது அரசியலமைப்பு பிரிவுகள் 14, 15-க்கு எதிரானது.

Habitual Criminals என்று குறிப்பிடும் சிறை விதிமுறைகள் அரசியல் சாசனம் 14,15,17,21,23 க்கு எதிரானது. எனவே, சிறை விதிமுறைகளையும் 3 மாதத்தில் மாற்ற வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: பேட்டரியால் இயங்கும் மிதிவண்டியை வடிவமைத்த அரசு பள்ளி மாணவன் : ஆலோசனை கேட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்!