India

ஒரு மதத்தினரிடம் மட்டும் பாகுபாடு காட்டுவது ஏன்? : ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளது.

இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் மத உணர்வுகளைத் தூண்டி இந்துத்வ கும்பல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. தற்போது, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் புல்டோசர் மூலம் இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது உச்சநீதிமன்றம், "குறிப்பிட்ட ஒரு மதத்தினரின் கட்டடங்களை மட்டும் குறிவைத்து இடிக்கக் கூடாது.ஒரு பிரிவினரிடம் மட்டும் பாகுபாடு ஏன்?. பெண்களையும் குழந்தைகளையும் நடுத் தெரிவில் நிறுத்த கூடாது என ஒன்றிய அரச கண்டித்து கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும்,குற்றவாளி என்பதற்காக ஒருவரின் கட்டடம் மற்றும் வீட்டை இடிக்க அனுமதிக்க முடியாது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 4.5 லட்சம் கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளது. விதிமீறல் கட்டிடங்கள் குறித்தும், நோட்டீஸ் அனுப்புவது, தொடர் நடவடிக்கை எடுப்பது குறித்த விவரங்களை பதிவிட இணையதளம் உருவாக்கப்பட வேண்டும். விதி மீறல் கட்டடங்களாக இருந்தால் கூட குறைந்தது 15 நாட்களாவது அவகாசம் வழங்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Also Read: 1200 ஆண்டுகள் பழமையான மசூதி இடிப்பு : பா.ஜ.க ஆட்சி நடக்கும் குஜராத்தில் புல்டோசர் அராஜகம்!