India
“அதானி வங்கிக் கணக்கில் பணம் வெள்ளம் போல் பெருக்கெடுத்து வருகிறது”: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி!
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அனைத்தும் ஒரு சார்பு வளர்ச்சியாகவே அமைந்துள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும் பெரும் முதலாளிகளுக்கு கூடுதல் சலுகைகளும், உழைக்கும் மக்களுக்கு சலுகைகள் அல்லாத நிலையுமே நீடிக்கிறது.
அதற்கு சிறந்த உதாரணமாகவே, அதானியின் அசுர வளர்ச்சியும், விவசாயிகளின் வஞ்சிப்பும் அமைந்துள்ளது.
ஒன்றிய பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பேற்று 10 ஆண்டுகளைக் கடந்த நிலையில், இந்தியாவின் பொருளாதார நிலை வளர்ந்துள்ளதாக பெருமைப்பட்டுக்கொள்ளும் பா.ஜ.க, விவசாயிகளின் வறுமை நிலையை புறக்கணித்து வருகிறது.
கடுமையான விலைவாசி உயர்வு, பணவீக்கத்தை அடுத்து விவசாயத்தொழில் மூலம் அடிப்படை வசதிகளைக் கூட நிறைவு செய்ய முடியவில்லை என்று சாலைக்கு வந்து குறைந்த ஆதரவு விலை கோரும் விவசாயிகளின் நிலை, இன்றளவும் மாற்றமடையாமலேயே இருக்கிறது.
ஆனால், உலக நாடுகளிடமிருந்து கடுமையான குற்றச்சாட்டுகளைப் பெற்றும், மோசடிகளை அவிழ்த்துவிட்டும், அதானியின் சொத்து மதிப்பு மட்டும், ஒன்றிய பா.ஜ.க. அரசின் உதவியால் ஏறுமுகத்திலேயே இருக்கிறது.
இதனை ஒப்பிட்டு அரியானா சட்டப்பேரவைப் பிரச்சாரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “அதானி களத்தில் நின்று கடுமையாக உழைப்பவர் அல்ல, சிறு தொழில் புரிபவர் அல்ல. ஆனால், அவரது வங்கிக் கணக்கில் வெள்ளம் போல் பணம் பெருக்கெடுத்து வருகிறது. அதே வேளையில், வெள்ளம் அளவிலான பணம் மக்கள் வங்கிக்கணக்கிலிருந்து பறிக்கப்படுகின்றன” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
-
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!
-
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
-
உக்ரைனின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றியது ரஷ்யா : போரில் தொடரும் ரஷ்ய ஆதிக்கம் !
-
மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!