India
“37 தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க வேண்டும்!” : ஒன்றிய அமைச்சருக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கடிதம்!
2014 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, “நாங்கள் தேர்தலில் வென்றால், இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கை முழுமையாக கைவிடப்படும்” என உறுதி மொழி அளித்தார் தற்போதைய பிரதமர் மோடி.
ஆனால், வாக்குறுதி அளித்தும், மோடி பிரதமராக பதவியேற்றும் சுமார் 10 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையால் முன்னெடுக்கப்படும் தாக்குதல்களும், கைது நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளதே தவிர, குறைந்ததாக இல்லை.
இதனைக் கண்டித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற முறை கடிதம் எழுதியும், நேரில் சென்று வலியுறுத்தியும், அது குறித்து தக்க நடவடிக்கை எடுப்பதில், தொடர்ந்து மந்தம் காண்பித்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
இந்நிலையில், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் வழக்கறிஞர் சுதா அறிவுறுத்தலின் பேரில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக்கோரி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.
அக்கடிதத்தில், அவர் குறிப்பிட்டதாவது, “கடல் எல்லைக்கடந்ததாகக் கூறி, இலங்கை கடற்படையால், செப்டம்பர் 21ஆம் நாள் கைது செய்யப்பட்ட 37 தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க உடனடியாக வழிவகுக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு மீனவர்களுக்கு சற்றும் ஏற்றுக்கொள்ள இயலாத வகையில் விதிக்கப்பட்டுள்ள அபராதத்தையும் நிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
-
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!
-
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
-
உக்ரைனின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றியது ரஷ்யா : போரில் தொடரும் ரஷ்ய ஆதிக்கம் !
-
மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!