India

471 நாட்களுக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு ஜாமின் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு எதிர்க்கட்சி ஆட்சி செய்து வரும் மாநிலங்களை அடக்க பார்க்கிறது. அதன் ஒரு பகுதியாக அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துயை கொண்டு எதிர்க்கட்சி தலைகளை கைது செய்து மிரட்டி வருகிறது.

அப்படிதான் மணீஷ் சிசோடியா, அரவிந்த் கெஜ்ரிவால்,ஹேமந்த் சோரன் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர். கடந்த 2023 ஆம் ஆண்டு அமைச்சாரக இருந்த செந்தில் பாலாஜியை சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கக்கு எதிராகவும், ஜாமின் வழங்க கோரியும் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்து இருந்தார். ஆனால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.

பின்னர் உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஒஹா தலைமையிலான அமர்வில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. மேலும் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக எந்த நபரையும் நீண்ட நாட்களுக்கு சிறையில் வைத்திருக்க முடியாது என்பதை இன்று உச்சநீதிமன்றம் மீண்டும் அழுத்தமாக கூறியுள்ளது.

இந்த ஜாமினை தொடர்ந்து 471 நாட்களுக் பிறகு செதில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்துள்ளது. இன்று மாலை அல்லது நாளை அவர் சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்ததை அடுத்து கரூரில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்பட்டு வருகிறது.

Also Read: 10 கோடிப் பார்வைகளைக் கடந்து அருஞ்சாதனை புரிந்துள்ளது ‘தமிழ் மின் நூலகம்!’ : தமிழ்நாடு அரசு தகவல்!