India
வீட்டிற்குள் புகுந்து iPhone-ஐ எடுத்துச் சென்ற குரங்கு : பதறியடித்து பின் தொடர்ந்த உரிமையாளர்!
கர்நாடக மாநிலம், பெங்களூரு தொட்டபல்லாபூரின் துாபகெரே கிராமத்தில் குரங்குகளின் அதிகமாக உள்ளது. கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகள் வீட்டிற்குள் புகுந்து கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு சென்றுவிடுகின்றன. இது அப்பகுதி மக்களுக்கு பெரும் அவதியாக இருந்து வருகிறது.
இந்நிலையில், குரங்கு ஒன்று வீட்டிற்குள் சார்ஜ் போட்டிருந்த iPhone-ஐ எடுத்துக் கொண்டு அப்பகுதியில் இருந்த மொபைல் டவர் மீது ஏறியது. இதைப்பார்த்த அதன் உரிமையாளர் கவலையடைந்தார்.
பின்னர் குரங்கிடம் இருந்து செல்போனை வாங்க அப்பகுதி மக்கள் முயற்சி செய்த அனைத்தும் தோல்வியடைந்தது. பிறகு ஒரு கட்டத்தில் இவர்கள் சோர்வடைந்ததை அறிந்த குரங்கு செல்போனை கீழே வீசி எறிந்து அங்கிருந்து சென்றது.
செல்போன் கீழே விழுந்ததில் டிஸ்ப்ளே உடைந்தது. பிறகு செல்போன் கிடைத்த நிம்மதியில் அதன் உரிமையாளர் வீட்டிற்கு சென்றார். குரங்குகளின் தொல்லை குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறார்கள்.
Also Read
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!