India

பாலியல் வன்முறைக்கு எதிரான 42 நாட்கள் போராட்டம் நிறைவு! : மீண்டும் பணிக்கு திரும்பிய மருத்துவர்கள்!

இந்திய அளவில் பாலியல் வன்கொடுமை உச்சம் தொட்டிருக்கும் வேளையில், கொல்கத்தா மருத்துவக் கல்லூரி பாலியல் வன்முறை சம்பவம், ஒட்டுமொத்த நாட்டையே நிலைகுலைய வைத்தது.

இதுபோன்ற பாலியல் வன்முறைகளுக்கு தகுந்த தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் பலர் உறுதி பூண்டனர்.

எனினும், கல்லூரி வளாகத்தில் பதற்றம் நீடித்தது. மருத்துவ மாணவர்களும், இளநிலை மருத்துவர்களும், முழக்கமிட்டு உரிமை குரல் எழுப்பினர்.

இதற்கான விடை இந்திய அளவில் எதிரொலித்தது. உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு தகுந்த தண்டனையையும், இனி இது போன்ற கொடூரங்கள் நடக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் வழி வகுத்தது.

மேற்கு வங்க சட்டப்பேரவையில், மம்தா பானர்ஜி தலைமையிலான அரசால், பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான கடுமையான சட்டம் முன்மொழியப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டது.

இந்நிலையில், தங்களது தொடர் போராட்டத்தை நிறுத்திக்கொள்வதாக அறிவித்த, இளநிலை மருத்துவர்கள், சுமார் 42 நாட்களுக்கு பிறகு, இன்று தங்களது பணிக்கு திரும்பினர்.

Also Read: INDvsBAN டெஸ்ட் போட்டியை காண திரண்ட சென்னை ரசிகர்கள் : வலுவான நிலையில் இந்திய அணி !