India
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் : முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி எதிர்ப்பு - காரணம் என்ன?
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் குறித்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழு அளித்த பரிந்துரைகளுக்கு ஒன்றிய அமைச்சரவை கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
அதன்படி, மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒருகட்டமாகவும், பின்னர் 100 நாள்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படும்.இத்திட்டம் நடைமுறைக்கு சாத்தியமற்றது; பாஜகவின் மலிவான அரசியல் நாடகம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
இந்நிலையில், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான பரிந்துரைகளில் பல குறைபாடுகள் உள்ளதாகவும், நாடு முழுவதும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை தேர்வு செய்யும் உள்ளாட்சித் தேர்தல் தனியாக நடத்தப்படும் என்ற பரிந்துரையானது, ஒரே நேர தேர்தலின் சாராம்சத்துக்கு முற்றிலும் முரணாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்குள் தனித்தனி தேர்தல்களை நடத்துவது, பல்வேறு சவால்களை உருவாக்கும் என்பதோடு வாக்காளர்கள் மத்தியிலும் சோர்வை ஏற்படுத்தும் என்றும் ஒரே நேர தேர்தல் திட்டத்துக்கு தற்போது உள்ளதைவிட மும்மடங்கு அதிக எண்ணிக்கையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்-வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவிகள் தேவை என தேர்தல் ஆணையம் சுட்டிக் காட்டியுள்ளதாகவும்,
அதன்படி, சுமார் 40 லட்சம் கூடுதல் இயந்திரங்கள் தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ள அவர், இதற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை செலவிட வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இத்திட்டத்தின் குறைபாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பது அவசியம் என்றும் எஸ்.ஒய்.குரேஷி தெரிவித்துள்ளார்.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!