India
காலையில் ஜாமீன்.. மீண்டும் கைது.. தொடர் சிக்கலில் பாஜக MLA: பெண் அளித்த பாலியல் புகாரால் அதிரடி -பின்னணி?
கர்நாடகா மாநிலம் ராஜேஸ்வரி நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக (MLA) இருப்பவர் முனிரத்னா நாயுடு. பாஜகவை சேர்ந்த இவர் மீது தற்போது 40 வயது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த அந்த பெண், கடந்த 2020 முதல் தொடர்ந்து 2 வருடமாக பாஜக எம்.எல்.ஏ முனிரத்னாவால், தான் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டதாக ராம்நகரா மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் தன்னை மிரட்டி வன்கொடுமை செய்த வீடியோவையும் முனிரத்னா வைத்துக்கொண்டு தன்னை மிரட்டுவதாகவும், பாஜக எம்.எல்.ஏ முனிரத்னாவுக்கு ஆதரவாக அவரது உதவியாளர்கள் இருப்பதாகவும் மொத்தம் 7 பேர் மீது புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் பாஜக எம்.எல்.ஏ முனிரத்னா உள்பட 7 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலியல் புகார் அளித்த பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காவல் துணை ஆணையர் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெற்றார். அந்த வாக்குமூலத்தில் கக்களிபுரா பகுதியில் உள்ள தனியார் விடுதியில், தன்னை முனிரத்னா பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா, ஒப்பந்ததாரர் ஒருவரை, அவரது சாதியைக் குறிப்பிட்டு அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், முனிரத்னாவுக்கு எதிராக ஒக்கலிகா மற்றும் தலித் சமூக அமைப்புகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அக்ரஹாரா சிறையில் இருந்து இன்று (செப்.20) காலை முனிரத்னா ஜாமீனில் வெளியே வந்த நிலையில், பெண்ணை 2 வருடங்களாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!