India
மருத்துவக் கல்லூரிகளில் CCTV, Biometric! : பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்மொழிந்து உச்சநீதிமன்றம் உத்தரவு!
இந்தியாவில் பல ஆண்டுகளாக, நடைமுறையில் இருந்து வரும் பாலியல் வன்முறைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கப்படாமலேயே நீடிக்கிறது.
அதற்கு கடந்த ஆண்டு இறுதியில் ஒன்றிய அரசின், தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்ட அறிக்கையும் முக்கிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
NCRB வெளியிட்ட அவ்வறிக்கையின் படி, 2022ஆம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை மையப்படுத்தி, சுமார் 4.45 இலட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதில் பா.ஜ.க ஆளும் மாநிலமான உத்தரப் பிரதேசம், சுமார் 65.7 ஆயிரம் வழக்குகளுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பா.ஜ.க கூட்டணி ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 45.3 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், ஒன்றிய பா.ஜ.க அரசின் மீதும், பா.ஜ.க ஆட்சி அமைத்திருக்கும் மாநிலங்களின் மீதும் சட்ட ஒழுங்கு காக்கப்படுகிறதா? என்ற கேள்விகள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த மாதம் கொல்கத்தாவில் ஒரு பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்டது தேசிய அளவில் பெரும் சிக்கலாக வெடித்தது.
இதனைத் தொடர்ந்து, இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள். நாட்டில் நிலவும் இச்சிக்கலுக்கு உடனடி தீர்வு மிகவும் முக்கியமானது என தீர்ப்பளித்தனர்.
அவ்வகையில், பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், “அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் 2 வாரத்தில் CCTV கண்காணிப்பு கருவிகள் நிறுவ வேண்டும். பயிற்சி பெற்ற பெண் காவலர்களை மருத்துவமனை பணி அறைகளில் பாதுகாப்புக்கு நியமிக்க வேண்டும். பயோ மெட்ரிக் பாதுகாப்பு கருவிகள் பொறுத்த வேண்டும். குறிப்பாக, பெண் மருத்துவர்களை 12 மணி நேரத்திற்கும் மேல் பணியில் ஈடுபட செய்வதை தவிர்க்க வேண்டும்” என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
-
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!
-
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
-
உக்ரைனின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றியது ரஷ்யா : போரில் தொடரும் ரஷ்ய ஆதிக்கம் !
-
மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!