India
போதிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்த சிறுவர்கள்... 15 கி.மீ தூக்கி சென்ற பெற்றோர்.. பாஜக ஆட்சியில் ஷாக்!
பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவின் அகேறி என்ற பகுதியை அடுத்துள்ள பட்டிக்கான் (Pattigaon) என்ற கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 6 மற்றும் 3 வயதில் குழந்தைகள் உள்ளன. இந்த சூழலில் இந்த குழந்தைகளுக்கு மிகவும் காய்ச்சல் அடிக்கிறது என்பதால் கடந்த செப்.4-ம் தேதி ஜமீல்கட்டா ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் அங்கே மருத்துவர் இல்லாத காரணத்தினால், சுமார் 2 மணி நேரம் போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் இரண்டு சிறுவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். நீண்ட நேரம் கழித்து வந்த மருத்துவர் சிறுவர்கள் உயிரிழந்துவிட்டதாக பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர்.
பின்னர் குழந்தைகளின் உடலை தங்கள் வீட்டுக்கு கொண்டு செல்ல முனைந்த பெற்றோர், அதற்காக ஆம்புலன்ஸை எதிர்ப்பார்த்துள்ளனர். ஆனால் ஆம்புலன்சும் இல்லாத காரணத்தினால் வேறு வழியின்றி சுமார் 15 கி.மீ வரை தங்கள் தோள்களில் தங்கள் குழந்தைகளின் சடலங்களை கொண்டு சென்றனர். சேறும், சகதியுமாய் இருந்த பாதையில் நீண்ட நேரம் நடந்துகொண்டே பெற்றோர் தங்கள் வீட்டுக்கு பிள்ளைகளின் சடலங்களை கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக துணை முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் உள்ளிட்டோருக்கு காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து மருத்துவ அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து சிறுவர்களின் உடல்களை பெற்று அவர்கள் இறப்புக்கு காரணம் அறிய உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் அங்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த சம்பவம் கண்டனங்களை பெற்று வருகிறது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!