India
நடு ரோட்டில் இளம்பெண் வன்கொடுமை... தடுப்பதற்கு பதிலாக வீடியோ எடுத்த கொடூரர்கள்... பாஜக மாநிலத்தில் அவலம்!
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்கள் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஒன்றாகவே கருதப்படுகிறது. குஜராத், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் இதில் முதன்மையாக திகழ்கிறது. இந்த சூழலில் தற்போது பாஜக ஆளும் ம.பியில் பெண் ஒருவர் நடு ரோட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் உள்ள அகர்நாக்கா என்ற பகுதியில் இளம்பெண் ஒருவர் குப்பைகளை பொறுக்கும் தொழிலை செய்து தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இந்த சூழலில் அதே பகுதியை சேர்ந்த லோகேஷ் என்ற நபர் ஒருவர் அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார். தொடர்ந்து அந்த பெண்ணை தான் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வாரத்தை காட்டியுள்ளார்.
இதனை நம்பிய அந்த பெண்ணும் அந்த நபரிடம் பேசியுள்ளார். தொடர்ந்து தான் கையில் வைத்திருந்த மதுவை குடிக்க அந்த பெண்ணை வற்புறுத்தியுள்ளார். இதனால் அந்த பெண்ணும் மதுவை குடித்து போதைக்கு உள்ளாகியுள்ளனர். பின்னர் அந்த பெண்ணை அதே சாலையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
போதையில் இருந்த பெண்ணை வன்கொடுமை செய்த இளைஞரை அந்த வழியே சென்ற மக்கள் தடுக்கமால் வீடியோ எடுத்துள்ளனர். இதில் ஒருவர் எடுத்த வீடியோ இணையத்தில் வெளியானதையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லோகேஷ் என்ற நபரை கைது செய்துள்ளனர்.
மேலும் அந்த வீடியோவை வைரலாக்கிய முகமது சலீம் என்ற நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொடூரத்தை அங்குள்ள மக்கள் வேடிக்கை பார்த்தும் வீடியோ எடுத்தும் உள்ளனர். ஒரு குற்றத்தை தடுக்கமால் அதனை வீடியோ எடுத்தும், அதனை கண்டுகொள்ளாமல் சென்ற ம.பி. மக்களுக்கு சமூக ஊடகங்களில் கண்டனங்கள் குவிந்து வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!