India
புல்டோசர் கலாச்சாரம் - பொதுமக்களிடம் யோகி ஆதித்யநாத் மன்னிப்பு கேட்க வேண்டும் : அகிலேஷ் வலியுறுத்தல்!
உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பா.ஜ.க.ஆளும் மாநிலங்களில், குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கும் நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையான கருத்துகளை தெரிவித்தது.
”குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக ஒருவரின் வீட்டை எப்படி இடிக்க முடியும்” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இத்தகைய இடிப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் உருவாக்க நேரிடும் என்றும் எச்சரித்தனர்.
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற கருத்திற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் வரவேற்றுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ”மனித நேயத்தையும் நீதியையும் புல்டோசரின் கீழ் நசுக்கிய பாஜக-வின் அரசியல் சாசனத்திற்கு எதிரான முகம் தற்போது நாட்டின் முன் அம்பலமாகியுள்ளதாகவும், இந்த மிக முக்கியமான பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிடும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்ட சிலரை பழிவாங்க துடிக்கிறார்.
அவர்களை பழிவாங்கும் விதமான அரசியலை பயன்படுத்தி வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்து வருகிறார். புல்டோசர் கலாச்சாரம் சட்டத்திற்கு புறப்பானது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே பொதுமக்களிடம் யோகி ஆதித்யநாத் மன்னிப்பு கேட்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!
-
“அகப்பட்டுக் கொண்டார் அதானி - பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?” : மோடியை வெளுத்து வாங்கிய முரசொலி!
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!