India
பா.ஜ.க ஆட்சியில் சுதந்திரமாக சுற்றித்திரியும் அயோக்கியர்கள் : இஸ்லாமியர் தாக்குதலுக்கு ராகுல் கண்டனம்!
ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மாட்டிறைச்சி எடுத்து செல்லப்படுவதாக கூறி இஸ்லாமிய மக்கள் மீது இந்துத்துவ கும்பல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிகம் நடைபெறுகிறது. இந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்தாமல் பா.ஜ.க அரசுகள் வேடிக்கை பார்த்து வருகிறது.
தற்போது, மகாராஷ்டிரா மாநிலத்தில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த முதியவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹாஜி அஷ்ரப். இவர் கல்யாண் நகரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக இகத்புரி அருகே ரயில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, இருக்கையில் இருந்த இளைஞர்கள் சிலர் மாட்டிறைச்சி எடுத்து செல்வதாக கூறி அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும் அவரை தாக்குவதை இந்த கும்பல் தங்களது செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளது. இந்த வீடுயோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அயோக்கியர்களுக்கு பா.ஜ.க சுதந்திரம் கொடுக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”வெறுப்பை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி அச்சத்தின் ஆட்சியை நிறுவ பார்க்கிறார்கள்.
பா.ஜ.க அரசிடமிருந்து இந்த அயோக்கியர்களுக்கு கிடைத்துள்ள சுதந்திரத்தினால்தான், இதை செய்ய தைரியம் வந்துள்ளது. சிறுபான்மையினர், குறிப்பாக இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதை அரசு வாய்மூடிப் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!