India

சென்னை TO ஹரியானா... லாரி மூலம் கொண்டு செல்லப்பட்ட ஐ-போன்கள் திருட்டு... நடந்தது என்ன?

உலகின் மிக விலையுர்ந்த மொபைல் போன்களில் முதன்மையானது ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐ போன். அதிக வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த போன்கள், மற்ற போன்களை காட்டிலும் கேமரா உள்ளிட்ட வசதிகள் அம்சங்கள் சிறப்பாக இருக்கும். இதனாலே இதனை வாங்குவது பலரது கனவாகவே உள்ளது.

தமிழ்நாட்டில் சென்னையில் ஐ-போன் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு ஐ-போன்கள் தயாரிக்கப்பட்டு டெலிவரி செய்யப்படும். அந்த வகையில் தற்போது சென்னையில் இருந்து ஹரியானாவுக்கு கண்டெய்னர் லாரி மூலம் கொண்டு செல்லப்பட்ட ஐ-போன்கள் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தயாரிக்கப்பட்ட ஐ-போன்கள் கண்டெய்னர் லாரி மூலம் ஹரியானாவில் உள்ள குருகிராம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சூழலில் லாரி மத்திய பிரதேசத்துக்குள் சென்றதும், அங்குள்ள சாகர் பகுதியில் வைத்து கண்டெய்னர் லாரியை மர்ம நபர்கள் மறித்துள்ளனர். தொடர்ந்து லாரி ஓட்டுநரை மிரட்டி, அவருக்கு போதைப்பொருள் கொடுத்து, அவரை கட்டிப்போட்டு கண்டெய்னர் லாரியில் இருந்த ஐ-போன்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த ஐ-போன்களின் மதிப்பு சுமார் ரூ.11 முதல் 12 கோடி வரை இருக்கும். சில மணி நேரத்துக்கு பிறகு சுயநினைவுக்கு வந்த லாரி ஓட்டுநர், இதுகுறித்து அனைவர்க்கும் தெரியப்படுத்தினார். கடந்த ஆக 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று நடந்த சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது 4000 பிராண்ட் புதிய ஐ-போன்களில் 1,500 ஐ-போன்கள் திருட்டுப்போன சம்பவம் தெரியவந்தது. இதனிடையே இந்த விவகாரம் குறித்து சம்பவதன்றே ஓட்டுநர் போலீசுக்கு தெரிவித்துள்ளார். ஆனால் இதுகுறித்து எந்தவொரு வழக்கும் பதிவு செய்யாமல் இருண்டுள்ளனர். இந்த சூழலில் ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் மத்திய பிரதேசத்துக்கு வந்து அளித்த புகாரின்பேரில், ஆக 31 (சனிக்கிழமை) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து அந்த பகுதியில் அமைந்துள்ள சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவைகளை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வருங்கால மனைவியுடன் ஹோட்டலுக்கு சென்ற இளைஞர்... நண்பர்களுடன் சேர்ந்து செய்த கொடூரம் - நடந்தது என்ன?