India
தமிழ்நாடு அரசு - கூகுள் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்! : AI-ல் புதிய சாதனை படைக்க திட்டம்!
தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களை அமைக்க உள்ளது கூகுள் நிறுவனம். மேலும், தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் புதிய சாதனைகளுக்கான முன்னேற்றத்தை மேம்படுத்த உதவுவதோடு, ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை சார்ந்த சாதனைகள், திறன் மேம்பாடு போன்ற பகுதிகளில் வளர்ச்சியையும் வழிநடத்த உள்ளது.
கூகுள் நிறுவனம் தமிழ்நாட்டில் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான புதுமைகளை ஊக்குவிக்க, தமிழ்நாடு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், திறன் மேம்பாடு மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் உட்பட தொழிற்சாலை சார்ந்த மேம்பாடு போன்ற முக்கிய பகுதிகளில் முன்னேற்றங்களை மேம்படுத்த உள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கூகுள் நிறுவனத்தின் மவுண்டன் வியூ அலுவலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா முன்னிலையில் கையெழுத்தானது. கூகுளின் கிளவுட் தளத்தின் தலைவர் அமித் ஸவேரி, கூகுள் பிக்ஸல் வணிக அலகின் துணைத் தலைவர் நந்தா ராமச்சந்திரன் மற்றும் தமிழ்நாடு அரசின் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பு (Guidance தமிழ்நாடு) ஆகியோர் கையொப்பமிட்டனர்.
இந்த புரிந்துணர்வு பரிமாற்றத்தின் போது தமிழ்நாடு தொழில்துறை, முதலீட்டு மேம்பாடு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் மற்றும் Guidance தமிழ்நாடு நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, கூகுள் நிறுவனம் தமிழ்நாடு அரசின் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பு (Guidance தமிழ்நாடு) உடன் இணைந்து, ஒரு வலுவான செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டு சூழலை உருவாக்க உள்ளது.
இது நுட்பமான தொழில்நுட்பங்கள் மற்றும் வளங்களை அணுகக்கூடியதாகவும், மேலும் தனிநபர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உலகளாவிய வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உதவுவதை மையமாகக் கொண்டு வலுவான செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டு சூழலின் வளர்ச்சியை ஆதரிக்கும்.
இது குறித்து, தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் டாக்டர் டிஆர்பி ராஜா பேசுகையில், “தமிழகத்தில் தயாரிக்கப்பட்டு வருவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மேட் இன் இந்தியா பிக்சல் 8 போன் உட்பட மேம்பட்ட உற்பத்தியில் கூகுளுடன் இணைந்து தமிழ்நாடு செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
தற்போது கையெழுத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களின் கீழ் முக்கிய செயற்கை நுண்ணறிவு (AI) முயற்சிகளை ஆராயும். கூகுள் உடனான எங்களின் கூட்டாண்மை, தமிழ்நாட்டை ஒரு செழிப்பான செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக நிறுவுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.
இதன் மூலம் நாம் தொழில்நுட்பத்தை மட்டும் பின்பற்றவில்லை, எதிர்காலத்தில் நமது மாநிலத்தை முன்னெடுத்துச் செல்ல அதன் சக்தியைப் பயன்படுத்துகிறோம். முதலமைச்சரின் தொலைநோக்கு பார்வை கொண்ட 'நான் முதல்வன்' திட்டம், இந்தியாவின் மிகப்பெரிய திறன் மேம்பாட்டு முயற்சியாகும்.
இது தமிழ்நாட்டு இளைஞர்களை எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு திறன்களுடன் தயார்படுத்தி, ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், சுகாதாரம் போன்ற முக்கிய துறைகளில் உள்ள சவால்களை சமாளித்து, புதுமைகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
2 மில்லியன் இளைஞர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்துவதற்காக அதிநவீன செயற்கை நுண்ணறிவு திறன்களைக் கொண்டு அவர்களை தயார்படுத்த தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கூகுள் உடனான முயற்சிகளை ஆராய்வதற்கு நாங்கள் காத்திருக்கிறோம்” என்றார்.
Google Cloud தளத்தின் தலைவர் அமித் ஜவேரி கூறுகையில், “செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த புரிந்துணர்வு, செயற்கை நுண்ணறிவு மூலமாக பரந்த அளவிலான வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நமது பகிர்ந்த பொறுப்பைக் காண்பிக்கிறது.
தமிழ்நாட்டில் ஒரு பலம் வாய்ந்த செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டு சூழலை உருவாக்குவதற்காக இணைந்து வேலை செய்ய எதிர்நோக்குகிறோம். இது புதுமைகளை இயக்குவதற்கும் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் மட்டுமல்லாமல், டிஜிட்டல் யுகத்தில் வெற்றி பெற தேவையான திறன்களைக் கொண்ட நபர்களை அதிகாரமாக்கும்” என்றார்.
கூகுள் மற்றும் தமிழ்நாடு அரசு கீழ்காணும் முக்கிய பகுதிகளில் ஒத்துழைப்புகளை ஆராய்ந்து வருகின்றன:
பிக்ஸல் 8 மொபைல்களின் உற்பத்தி:
இந்தியாவில் தயாரிக்கப்படும் பிக்ஸல் 8 சாதனங்கள், தமிழ்நாட்டில் உள்ளூர் கூட்டாளிகளுடன் தயாரிக்கப்படுதல்.
திறன் மேம்பாடு மற்றும் கல்வி:
கூகுள், தமிழ்நாட்டின் இளைஞர்களை செயற்கை நுண்ணறிவு திறன்களுடன் மேம்படுத்த அரசுடன் இணைந்து பணி புரியும். ‘நான் முதல்வன்’ என்ற திறன் மேம்பாட்டு தளத்தின் கீழ், செயற்கை நுண்ணறிவு கற்றல் முன்மொழிவுகளை ஆராய்வது மற்றும் டிஜிட்டல் கல்வியை மேம்படுத்தி, எதிர்காலத்திற்கான இளைஞர்களை உருவாக்கும் திட்டங்களை முன்மொழிவது.
ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் புதுமையான முயற்சிகள்:
கூகுள், தமிழ்நாட்டின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுடன் இணைந்து, Google வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப தலைவர்களுடன் மேற்பார்வை மற்றும் தகவல் தொடர்பை வழங்கும். செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்டு உள்ளூர் சவால்களை தீர்க்கவும், சமூகத்தில் புதுமை மற்றும் பிரச்சினைகளுக்கான தீர்வை ஊக்குவிக்கும் வடிவமைப்புடன் செயல்பட உள்ளது. இது, கூகுள் தகுதியான ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு தொழில்முனைவோர் நிதியுடன் கூடிய கிளவுட் கிரெடிட்கள், தொழில்நுட்ப பயிற்சி மற்றும் வணிக ஆதரவை வழங்கி, அவர்களின் வளர்ச்சியை வேகமாக்கும்.
சிறு குறு நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற பொருளாதாரம்:
தமிழ்நாட்டின் சிறு குறு நிறுவனங்கள் உயர்வு பெற கூகுள் மற்றும் கூகுள் கிளவுட், தமிழ்நாடு அரசுடன் இணைந்து கூகுள் கிளவுட் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை திறந்த நெட்வொர்க் சந்தையில் பயன்படுத்த உதவிக் கூடிய முயற்சிகளை மேற்கொள்வார்கள். இது எளிதாக அணுகலை உருவாக்க, செயல்களை தானாகச் செய்ய, முடிவெடுத்தலை மேம்படுத்த, மற்றும் தொழில்நுட்பப் பயன்படுத்தலின் மூலம் புதுமையை ஊக்குவிக்க உதவுகிறது.
கூகுள், சமூகத்திற்கு அதிக அக்கறை அளிக்கும் செயற்கை நுண்ணறிவை உருவாக்க முனைகிறது. இதன் சவால்களை எமது செயற்கை நுண்ணறிவு விதிகளின் அடிப்படையில் கையாள்கிறது. உலகின் மிக அவசரமான பிரச்சினைகளுக்கான தீர்வுகளை உருவாக்க அடிப்படையான ஆராய்ச்சியின் மூலம் எங்களை முன்னேற்றுகிறது. பரந்த சமூகங்களுடன் ஒத்துழைப்பது, உண்மையான தாக்கத்துடன் முன்னேற்றத்தை விரைவாக சாதிக்க உதவுவதோடு, இந்த மாற்றியமைக்கும் தொழில்நுட்பங்களை நாகரிகமாகவும் பாதுகாப்பாகவும் முன்னேற்றுவதை எங்கள் நோக்கம்.
Also Read
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!