India
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் பா.ஜ.க : மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு!
ஒன்றியத்தில் பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு நாடு முழுவதும் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில் பெண்கள் மீதான வன்முறை தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது.
அண்மையில் மேற்குவங்க மாநிலத்தில் இளம் பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கொடூரம் மறைவதற்குள் பீகார், மாகராஷ்டிரா மாநிலங்களில் பள்ளி சிறுமிகள் மீது வன்கொடுமை நிகழ்ந்துள்ளது.
அதேபோல் உத்தர பிரதேசத்தில் இரண்டு சிறுமிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இவர்கள் மீது பாலியல் வன்கொடுமை தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பெண்களுக்கு இழைக்கப்படும் எந்த அநீதியையும் பொறுத்துக்கொள்ள முடியாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆவேசமாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ” நாட்டில் பெண்களுக்கு எதிராக ஒரு மணி நேரத்திற்கு 43 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதில் பழங்குடியின பெண்களுக்கு எதிராக நாள் ஒன்றுக்கு 22 குற்றங்கள் பதிவு செய்யப்படுகின்றன. பெண்களின் பாதுகாப்பு குறித்து செங்கோட்டையில் பிரதமர் மோடி பலமுறை பேசி இருக்கிறார். ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு எதுவும் செய்யவில்லை" என விமர்சித்துள்ளார்.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!