India
சிறையில் சொகுசு வாழ்க்கை : நடிகர் தர்ஷன் குறித்து இணையத்தில் வெளிவந்த வீடியோவால் பரபரப்பு!
பிரபல கன்னட நடிகர் தர்ஷன். அவரது தோழி பவித்ரா இவரை ரேணுகா சாமி என்ற ரசிகர் சமூகவலைதளத்தில் விமர்சித்துள்ளார். இதையடுத்து ரேணுகா சாமியை நடிகர் தர்ஷன் கடத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த வழக்கில் நடிகர் தர்ஷன் அவரது தோழி பவித்ரா, தர்ஷனின் நண்பர்கள் உட்பட 17 பேர் கடந்த ஜூன் 11-ம் தேதி கைது செய்யப்பட்டனர். தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் தர்ஷன், கையில் சிகரெட் மற்றும் தேனீர் கோப்பையுடன் நண்பர்களுடன் அமர்ந்து பேசும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
இந்த வீடியோ, தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சிறைக்குள் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்நிலையில், நடிகர் தர்ஷனுக்கு சலுகை காட்டிய பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகள் 7 பேரை பணியிடை நீக்கம் செய்து அம்மாநில சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.மேலும் தர்ஷனை வேறு சிறைக்கு மாற்றவும் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
தீபாவளி... 108 அவசார கால மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு !
-
கோலாகலமாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை : சென்னையில் மோசமடைந்த காற்று மாசு !
-
வெப்ப அலைகள் குறித்து ஐ.நா-வின் பகிரங்க எச்சரிக்கை... உடனடியாக பேரிடராக அறிவித்த தமிழ்நாடு அரசு!
-
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
-
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!