India

பீகாரில் கவுன்சிலர் சுட்டுக்கொலை : தோல்வியடைந்த இரட்டை எஞ்சின் அரசு - தேஜஸ்வி கண்டனம்!

பீகார் மாநிலம் ஹாஜிபூர் மாநகராட்சியின் வார்டு கவுன்சிலர் பங்கஜ் ராய். இவர் தனது வீட்டின் வெளியே அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் துப்பாக்கியால் அவரை சுட முயற்சித்துள்ளனர்.

பின்னர் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பங்கஜ் ராய் வீட்டிற்குள் ஓடியுள்ளார். அப்போது வீட்டிற்குள் புகுந்த அவர்கள் சரமாரியாக சுட்டு கொலை செய்துள்ளனர். பிறகு அங்கிருந்து மூன்று பேரும் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த கொலை சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கவுன்சிலருக்கே இங்கு பாதுகாப்பு இல்லையா? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

முன்னாள் முதல்வர் தேஜஸ்வி ”பீகாரில் இரட்டை எஞ்சின்அரசாங்கத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. உள்துறை அமைச்சகம் தோல்வியடைந்துள்ளது. முதல்வர் நிதீஷ்குமார் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்” என கண்டித்துள்ளார்.

Also Read: “3 மாதங்கள் எதற்கு? 3 மணிநேரம் போதும்!” : பா.ஜ.க.வின் கோரிக்கைக்கு அகிலேஷ் கண்டனம்!