India

Lateral Entry : ஒன்றிய அரசின் முடிவுக்கு ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வான் எதிர்ப்பு!

ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணைச் செயலாளர்கள், 35 இயக்குநர்கள், துணைச்செயலாளர்கள் என 45 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் அறிவிப்பாணை வெளியிட்டது.

இந்நிலையில்,இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.

இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கடும் கண்டனங்களை எழுப்பி வருகிறார்கள்.

இந்நிலையில் ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு, ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்."அரசு நியமனங்களில் இட ஒதுக்கீடு விதிகளை பின்பற்றப்பட வேண்டும். ஒன்றிய அரசின் Lateral Entry-க்கு நானும் எனது கட்சியும் ஆதரவாக இல்லை." என பேட்டி கொடுத்துள்ளார்.

ஒன்றிய அமைச்சராக இருக்கும் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி NDA கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: போராடிப் பெற்ற இடஒதுக்கீட்டை ஒழிப்பதா? - ஒன்றிய அரசை கண்டித்து கி.வீரமணி அறிக்கை !