India
“மத அரசியலை அனுமதிக்காத தேசிய தலைவர் கலைஞர்!” : ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்!
தமிழ்நாட்டு அரசின் கோரிக்கையை ஏற்று, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின், நூற்றாண்டுகால நினைவை போற்றும் வகையில், கலைஞர் நூற்றாண்டு நாணயத்தை வெளியிட்டு, ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேருரை ஆற்றினார்.
அதில் அவர் தெரிவித்ததாவது, “கலைஞரின் நினைவை போற்றும் இத்தருணத்தில், தலைசிறந்த இந்தியரும், தலைசிறந்த தலைவருமான கலைஞர் அவர்களுக்கு, அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
1960களில் வலுமை வாய்ந்த ஒரே மாநிலக்கட்சியாக திகழ்ந்த தி.மு.க.வை திறம்பட வழிநடத்தியவர் கலைஞர். அதன் தொடர்ச்சியாக, 60 ஆண்டுகளுக்கு பிறகும், தமிழ்நாட்டில் தி.மு.க இன்றும் ஆட்சியில் இருக்கிறது.
தமிழ்நாட்டின் குரலை தேசிய அளவில் ஒலிக்க செய்து, இந்தியாவில் கூட்டாட்சி தத்துவத்தை உறுதி செய்ததில், கலைஞரின் பங்கு மிகப்பெரியது. இவரின் செயல்பாடுகள், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கூற்றின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தியது.
விளிம்பு நிலை மக்களுக்காக போராடி, அவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுத்தவர் கலைஞர். தனது ஆட்சிக்காலத்தில் பாலின சமத்துவத்தை கட்டியெழுப்ப, மகளிர் சுய உதவிக்குழு மூலம் பெண்களுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்திய மாபெரும் தலைவர் கலைஞர் விளங்கினார்.
மதத்தின் பெயரில், இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்க ஒருபோதும் அனுமதிக்காத கலைஞர், மாநிலத்தலைவராக மட்டுமல்லாமல், மிக முக்கியத்துவம் வாய்ந்த தேசிய தலைவராகவும் விளங்கினார்.
தமிழ், இலக்கியம், திரைப்படம், அரசியல் என தனி முத்திரை பதித்தவர் கலைஞர். நாட்டின் தலைசிறந்த நிர்வாகியான கலைஞரால், வெற்றிகரமான கூட்டணி தேசிய அளவில் அமைந்திருக்கிறது. தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் வரலாற்றை உருவாக்கியதில் கலைஞருக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது” என்றார்.
Also Read
-
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
-
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!
-
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
-
உக்ரைனின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றியது ரஷ்யா : போரில் தொடரும் ரஷ்ய ஆதிக்கம் !
-
மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!