India
விண்ணில் பாய்ந்தது SSLV-D3 ராக்கெட் : EOS-08 செயற்கைக் கோளின் சிறப்புகள் என்ன?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்துள்ள பூமி கண்காணிப்பு செயற்கைகோள் EOS -08 செயற்கைகோளை சுமந்தப்படி எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்தது.
இந்த ராக்கெட்டில் 175 கிலோ எடை கொண்ட 3 ஆராய்ச்சி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பேரிடர் கால கண்காணிப்பு, காலநிலை, காட்டுத் தீ கண்காணிப்பு பணிகளை EOS-8 செயற்கைகோள் ஆய்வு செய்யும். அதோடு கடல் காற்றின் வேகம், மண்ணின் ஈரப்பதம், ஹிமாலய மலையின் பனிப்பொழிவு அளவு தரவுகளையும் EOS-8 தரவல்லது.
அதோடு EOIR என்ற கருவி பகல் மற்றும் இரவு நேரங்களில் புகைப்படங்களை எடுத்து அனுப்பும். மேலும், இந்த ராக்கெட்டில் ஸ்பேஸ் கிட்ஸ் ஆஃப்இந்தியா ஸ்டார்அப் நிறுவனம் வடிவமைத்துள்ள 200 கிராம் எடை கொண்ட ‘எஸ்ஆர்-டெமோசாட்’ எனும் நானோ செயற்கைக்கோளும் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
SSLV-D1 என்ற ராக்கெட் 2022 ஆண்டு ஆகஸ்ட் 7 தேதி மைக்ரோசாட் 2A மற்றும் AzaadiSAT செயற்கைக்கோளுடன் ஏவப்பட்டது. ஆனால் இது தோல்வியடைந்தது.
பின்னர் SSLV-D2 ராக்கெட்டி 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி Janus-1, AzaadiSAT-2, EOS-07 செயக்கைக் கோளுடன் பூமியிலிருந்து 450 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக ஏவப்பட்டன. இந்நிலையில்தான் இன்று SSLV-D3 ராக்கெட் வெற்றிக் கரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
Also Read
-
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
-
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!
-
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
-
உக்ரைனின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றியது ரஷ்யா : போரில் தொடரும் ரஷ்ய ஆதிக்கம் !
-
மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!