India

காந்தி தலையில் துப்பாக்கி... வன்மத்தை கக்கிய பாஜக ‘ஜனம் டி.வி.’ - குட்டு வெளியானதும் செய்த செயல் !

ஆண்டுதோறும் சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், இந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக ஆதரவு தொலைக்காட்சியான மலையாள 'ஜனம் டிவி', சுதந்திர தினத்தை முன்னிட்டு தங்கள் சமூக ஊடக பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில் பல்வேறு தலைவர்கள் இருந்த நிலையில், மஹாத்மா காந்தியும் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவரது தலையில் துப்பாக்கி வைக்கப்பட்டிருந்தது போல் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. அதாவது அவரது அருகில் இருந்த சந்திரசேகர ஆசாத் என்ற சுதந்திர போராட்ட வீரர், காந்தி தலையில் துப்பாக்கியை வைத்திருப்பதுபோல் இடம்பெற்றுள்ளது.

இந்த போஸ்டர் வெளியிட்ட சில மணி துளிகளையே சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஏனெனில் பாஜகவுக்கு காந்தி என்றால் ஆகவே ஆகாது.

காந்தியை சுட்ட கோட்ஸேவை பாஜகவினர் கொண்டாடி வரும் நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் பாஜக டி.வி. இப்படி ஒரு போஸ்ட்டரை வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு இடையே அரசியல் ரீதியாக பல்வேறு கருத்துகள் இருந்தாலும், நாட்டுக்காக போராடிய தலைவர்களை யார், எந்த கட்சி என்று பாராமல் அனைத்து கட்சிகளும் கொண்டாடி வரும் நிலையில், பாஜக டி.வி இப்படி செய்தது கண்டனங்களை எழுப்பியுள்ளது.

நேற்று (ஆக.14) இரவு 7.30-க்கு மேல் அந்த போஸ்ட் வெளியான நிலையில், இதற்கு கண்டனங்கள் எழுந்தது. இதையடுத்து அந்த போஸ்ட்டரை டெலிட் செய்த ஜனம் டிவி, அதற்கு பதிலாக வேறு போஸ்ட்டரை தயார் செய்து வெளியிட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில் பிரிட்டிஷாரிடம் அடிபணிந்து செயல்பட்ட சாவர்க்கர் புகைப்படம் இருந்ததோடு, நேரு உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் புகைப்படமும் வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளதற்கு தற்போது கடும் கண்டனம் குவிந்து வருகிறது.

Also Read: உடலில் 150mg விந்துக்கள் : நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் அதிர்ச்சியூட்டும் தகவல் !