India
அதானிக்கு மட்டுமே சேவகம் செய்யும் மோடி அரசு : மின் உற்பத்தி துறையில் சலுகை!
ஒன்றியத்தில் ஆட்சி செய்து வரும் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு மக்களுக்காக ஆட்சி செய்கிறதோ இல்லையோ? ஆனால் அதானி, அம்பானிக்காக தனது விசுவாசத்தை தொடர்ந்து காட்டி வருகிறது.
அதனால்தான் ஒவ்வொரு முறை நாடாளுமன்றத்தில் அதானி, அம்பானி பெயர்களை இந்தியா கூட்டணி தலைவர்கள் கூறும்போது எல்லாம் பா.ஜ.கவின் முகம் சிவந்து விடுகிறது. தற்போது மீண்டும் தனது விசுவாசத்தை மோடி அரசு அதானிக்காக காட்டியுள்ளது.
அது என்னவென்றால், மின் உற்பத்தி துறையில் அதானி குழுமத்துக்கு மட்டுமே சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”ஆஸ்திரேலியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்து ஜார்க்கண்டில் மின் உற்பத்தி செய்து வங்கதேசத்துக்கு அதானி குழுமம் விற்கிறது. இந்தியாவில் தற்போது மின்சாரத்தை விநியோகிக்கவும் அதானி குழுமத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனக்கு நெருக்கமானோருக்கு சலுகை வழங்குவதில் பிரதமர் மோடி மின்னல் வேகத்தில் செயல்படுகிறார்.
அதானி குழும நிறுவனத்துக்காக இந்தியாவின் ஏற்றுமதிக்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதி விதிகள் திருத்தத்தால் அதானி குழுமம் வங்கதேசத்துக்கு பதில் இந்தியாவிலேயே மின்சாரம் விற்க சலுகை அளிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்துக்கு மின்சாரம் விற்க அதானி குழுமம் ஒப்பந்தம் செய்து விநியோகித்து வருகிறது. வங்கதேசத்தில் நிலவும் வன்முறை மற்றும் அசாதாரண சூழல் காரணமாக அங்கு மின்சாரம் விற்பதில் சிக்கல் ஏற்பட்டது. வங்கதேசத்துக்கு அதானி குழுமம் மின்சாரம் விற்க முடியாததால் இந்தியாவிலேயே விற்கும் வகையில் மோடி அரசு சலுகை வழங்கியுள்ளது.
2018-ம் ஆண்டின் மின் உற்பத்தி சார்ந்த ஏற்றுமதி விதிகளில் ஒன்றிய மின்துறை அமைச்சகம் ஆக.12-ல் திருத்தம் செய்தது. ஜார்க்கண்ட் மாநிலம் கோடாவில் உள்ள அனல் மின்நிலையத்தில் அதானி நிறுவனம் 1,600 மெகாவாட் மின்உற்பத்தி செய்து வருகிறது. ஜார்க்கண்டில் உற்பத்தி செய்யும் 1,600 மெகாவாட் மின்சாரத்தையும் அண்டைநாடான வங்கதேசத்துக்கு அதானி குழுமம் விற்கிறது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!