India
”போலி விளம்பரங்கள் வெளியிட்டால் கடும் நடவடிக்கை” : பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!
பா.ஜ.க ஆதரவாளரான யோகா சாமியார் ராம்தேவ், பதஞ்சலி எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தை பா.ஜ.க மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் அதிகளவில் விளம்பரப்படுத்தி வருகின்றனர். கொரோனா அலையின் போது உலகமே தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக இயங்கி வந்த வேளையில், கொரோனா வைரஸை எதிர்க்கும் எனக் கூறி CORONIL என்ற ஒரு மருந்தை அறிமுகம் செய்தார் ராம்தேவ். பின்னர் அவை கொரோனாவை எதிர்க்காது என மருத்துவ துறை அறிஞர்கள் அறிவித்தனர்.
அதோடு மட்டுமின்றி அலோபதி மருத்துவத்துக்கு எதிரான பல்வேறு பொய்யான விளம்பரங்களையும் பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டு பரப்பி வந்தது. அதில் பல தவறான கருத்துக்களும், அலோபதி மருத்துவத்துக்கு எதிரான கருத்துக்களும் இருந்தது. இதனால் பொதுமக்களிடையே தவறான கருத்துகள் பரவியது.
இதனைத் தொடர்ந்து அலோபதி மருத்துவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் இதுபோன்ற விளம்பரங்கள் இனி ஒளிபரப்பக்கூடாது என பதாஞ்சலி நிறுவனத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் தொடர்ந்து அதுபோன்ற விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டது. தொடர்ந்து நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பாபா ராம்தேவ் மற்றும் பதாஞ்சலி நிறுவன இயக்குனர் பாலகிருஷ்ணா உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி நேரில் மன்னிப்பு கோரினர்.
மேலும், பதாஞ்சலி மீது உரிய நடவடிக்கை எடுக்காத உத்தரகாண்ட் அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பதஞ்சலி நிறுவனத்தை ஆய்வு செய்த உத்தரகாண்ட் அரசு 14 மருந்துகளுக்கு தடை விதித்தது.
இந்நிலையில், பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியதை தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று முடித்து வைக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், போலியான விளம்பரங்கள் வெளியிட்டாலோ, நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் பாபா ராம்தேவுக்கு கடும் எச்சரிக்கை செய்து வழக்கை முடித்து வைத்தனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!