India
அதானி பங்குகளில் செபி தலைவர் ரூ. 56 கோடி முதலீடு செய்துள்ளார்! : பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன்!
அதானி குழுமத்தின் பங்குகளில் நடந்த மோசடிகளில் இருந்து, அதானியை காப்பதற்கு, பா.ஜ.க மட்டுமே செயலாற்றி வருகிறது என்ற சர்ச்சையில், புதிதாக இணைந்த செபி தலைவர் குறித்து, பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தெரிவிக்கையில்,
“அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு அதானி குழுமம் குறித்து பல குற்றச்சாட்டுகளை வெளியிட்டு இருந்தது. அது அப்போது மிகப் பெரியளவில் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், 18 மாதங்களுக்கு பின், தற்போது ஹிண்டன்பர்க் நிறுவனம் மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் செபி எனப்படும் இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் தலைவர் மாதபி புச்-ம் முறைகேடுகளுக்குப் பயன்படுத்தப்பட்ட வெளிநாடுகளில் உள்ள அதானி நிறுவனங்களில் பங்குகள் இருப்பதாகக் கூறப்பட்டு இருந்தது.
இந்த தகவல், கூடுதல் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. செபி தலைவர் இந்த புகாருக்கு மறுப்பு தெரிவிக்கும் நிலையில் இது தொடர்பாக விரிவான விசாரணை என்பது தேவைப்படுகின்றது.
இந்த ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகும் முன்பு சந்தையில் பல வதந்திகள் வந்தன. சிலர் இது முகேஷ் அம்பானி குறித்து இருக்கும் என்று எல்லாம் சொன்னார்கள். ஆனால், அவை எல்லாம் தவறு. இதுபோன்ற தகவல் வெளியான உடனேயே வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தையில் அதானி குழுமம் தொடர்புடைய பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
கடந்த 2015ல் இப்போது செபி தலைவராக உள்ள மாதபி புச் மற்றும் அவரது கணவரும் சேர்ந்து 56 கோடி ரூபாயை சிங்கப்பூரில் முதலீடு செய்துள்ளனர். இதில் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்த நிதியை வைத்தே அதானி பங்குகளை வாங்கி விற்றுள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் சொல்லிய பல செய்திகள் குறித்து Financial Times என்ற பிரபல செய்தி நிறுவனமும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
செபி தலைவர் மாதபி புச் தனது கணவர் தவல் புச்-இன் நண்பர் அஹூஜா என்று சொல்லக்கூடியவர் அதானியின் நிறுவனங்களில் இயக்குநராக பணிபுரிந்துள்ளார். இதைவைத்து அதானிக்கும், இவர்களுக்கும் தொடர்பு இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. செபி தலைவர் மீதான இந்த விவகாரத்தில் தெளிவாக தீர்வு காண வேண்டும்.
இந்த சிக்கல்களை எல்லாம் இருந்தாலும், LIC, mutual funds போன்றவற்றில் முதலீடு செய்துள்ள சாதாரண மக்களுக்கு பாதிப்பு என்பது பெரிய அளவில் இருக்காது. இந்த விவகாரத்தில் முழுமையாக தீர்வு காணும் வரை பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது தொடர்ந்து இருக்கும்.
நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சிக்கு நிகராக இந்தியா கூட்டணி கட்சிகளுக்கும் அதிகாரம் உள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி தீர்வு காண முயற்சிக்க வேண்டும்” என்றார்.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!