India
4 மின் விசிறிகளுக்கு ரூ. 20 லட்சம் மின் கட்டணம் : குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த குஜராத்!
குஜராத் மாநிலம் நவ்சாரி பகுதியைச் சேர்ந்தவர் பங்க்திபென் படேல். இவர் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வருகிறார்.இவரது வீட்டில் 4 விளக்குகள், 4 மின் விசிறிகள், ஒரு குளிர்சாதன பெட்டி, ஒரு டிவி உள்ளது.
இந்நிலையில் ஜூன் - ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.20 லட்சத்து 1,902 வந்துள்ளது. ஆனால், இவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வரைதான் மின் கட்டணம் வரும். ரூ. 20 லட்சம் மின் கட்டணத்தை கண்டு பங்க்திபென் படேல் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து மின்வாரியத்திற்கு அவர் புகார் அளித்துள்ளார். பிறகு அதிகாரிகள் சரிபார்த்தபோது, மின் கட்டணத்தை தவறாக கணக்கிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு சரியான மின் கட்டண ரசீது வழங்கப்பட்டது.
Also Read
-
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
-
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!
-
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
-
உக்ரைனின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றியது ரஷ்யா : போரில் தொடரும் ரஷ்ய ஆதிக்கம் !
-
மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!