India
சிறுவனை தூக்கியடித்த இரும்பு கம்பி... கிரிக்கெட் விளையாடியபோது நேர்ந்த அதிர்ச்சி - கதறும் குடும்பம் !
டெல்லி, ரான்ஹோலா ரன்ஹோலா பகுதியில் அமைந்துள்ள கிரிக்கெட் அகாடமியில், அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவர் கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த சூழலில் நேற்றும் (ஆக.10) வழக்கம்போல் சிறுவன், அந்த மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.
அப்போது பந்து சற்று தூரம் சென்றதாகவும், அதனை எடுக்க சிறுவன் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் அங்கிருந்த மின் கம்பி மீது சிறுவன் கை வைத்துள்ளார். அப்போது மின்சாரம் அவர் மீது பாய்ந்து, சிறுவன் தூக்கியெறியப்பட்டார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனே, இதுகுறித்து போலீஸ் மற்றும் பெற்றோருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த போலீஸ் சிறுவனை மீட்டு தங்கள் வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க முற்பட்டபோது, சிறுவன் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த இரும்பு பைப் மீது மின்சாரம் எப்படி பாய்ந்தது ? இதற்கு யார் பொறுப்பு ? என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து உயிரிழந்த சிறுவனின் தாய், "நேற்று என் மகன் மின்சாரம் தாக்கியபோது, யாரும் அவரை கவனிக்கவில்லை, அந்த மின்சாரத்தை அணைக்கவில்லை. என் மகனுக்கு இன்று நடந்துள்ள இந்த நிகழ்வு, நாளை வேறு ஒருவருக்கும் நடக்கலாம். எனக்கு நீதி வேண்டும்" என்று கதறி அழுது பேட்டியளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு