India

Telegram-ல் கசிந்த முதுகலை நீட் வினாத்தாள் : மீண்டும் சர்ச்சையில் நீட் தேர்வு!

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்து வருகிறது. அண்மையில் நடைபெற்ற இளங்கலை நீட் தேர்வில், தேர்வு நடைபெறுவதற்கு முன்பே வினாத்தாள் கசிந்து சர்ச்சைய ஏற்படுத்தியது. மேலும் எப்போது இல்லாத அளவிற்கு ஒரே மதிப்பெண்களை பலர் பெற்று இருந்தனர்.

இதையடுத்து நீட் தேர்வில் முறைகேட்டில் ஈபட்ட பேராசிரியர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.

முதல் முதலில் நீட் தேர்வு அறிமுகம் படுத்தியபோதே தமிழ்நாடுதான் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முதலில் குரல் கொடுத்தது. ஆனால் இப்போது இந்தியாவே தமிழ்நாட்டின் குரலை பிரதிபலிக்கிறது.

நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்த கோரி 8 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் மாதம் கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கடிதத்தை அடுத்து கர்நாடகா, மேற்குவங்கம் மாநிலங்களில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானங்கள் கொண்டு வர அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெற உள்ள முதுகலை நீட் நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் டெலிகிராமில் கசிந்துள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஒரு வினாத்தாளுக்கு ரூ.70 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தேசிய தேர்வு முகமை (NTA)வின் பலவீனங்கள் மீண்டும் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்து கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முதுகலை நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததை அடுத்து ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற உள்ள தேர்வை ஒத்தி வைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Also Read: நீட் தேர்வு : 8 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!