India
”இது சர்வாதிகார நாடாளுமன்றமா?” : சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பவன் கெரா கேள்வி!
நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22 ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து ஜூலை 23 ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட சில துறைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அடுத்தநாளே, தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களை ஒன்றிய அரசு வஞ்சித்துள்ளதாக கூறி இந்தியா கூட்டணி எம்.பிக்கள் நாடாளுமுன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தனர்.
பின்னர், நேற்று மருத்துவ காப்பீட்டிற்கான 18% GST வரிசைய ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமுன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தின் படிகளுக்கு முன்னாள் உள்ள பகுதியில் எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையில் பேசியுள்ளார்.
இதற்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் இந்தியா கூட்டணி தலைவர்களும் ஓம் பிர்லாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா, ”நாடாளுமன்றத்தின் உள்ளே போராடக்கூடாது, நாடாளுமன்ற வளாகத்தில் போராடக்கூடாது, இப்போது நாடாளுமன்றத்தின் வெளியேயும் போராடக்கூடாது. இது ஜனநாய நாடாளுமன்றமா? சர்வாதிகாரமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
-
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!
-
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
-
உக்ரைனின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றியது ரஷ்யா : போரில் தொடரும் ரஷ்ய ஆதிக்கம் !
-
மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!