India
தொடரும் தமிழ்நாடு மீனவர்கள் சிக்கல் : நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு எம்.பிக்கள் கண்டனம்!
இந்தியாவின் வட எல்லையில் முன்னெடிக்கப்படுகிற பாதுகாப்பு நடவடிக்கைகளே பெருவாரியாக பேசப்பட்டும், விமர்சிக்கப்பட்டும் வரும் நிலையில், இந்திய இராணுவத்தின் இடையூரு இல்லாமல், தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் மீது தொடர்ந்து அச்சுறுத்தல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இலங்கை கடற்படை.
அவ்வகையில், கடந்த வாரம் கூட, இராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் இந்தியப்பெருங்கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கையில், அப்பாவி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது இலங்கை கடற்படை. இதில் ஒரு மீனவர் இறக்க நேரிட்டுள்ளது.
இது போன்ற தீர்க்கப்படாத மீனவர்கள் சிக்கல் குறித்து, தமிழ்நாடு அரசு சார்பில், ஒன்றிய அரசிடம் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டும், வன்முறை நிறுத்த தீர்மானங்கள் நிறைவேற்றி அனுப்பப்பட்டும், நடவடிக்கைகள் எடுத்தப்பாடில்லை.
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தில், மாநிலங்களவையில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்களும், மக்களவையில் தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி மற்றும் செல்வகணபதி ஆகியோர் மீனவர் சிக்கல்களை எடுத்துரைத்தனர்.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, “தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தி, பலரை கொன்று, மீதமுள்ளோரை சிறைப்படுத்தி வருகிறது இலங்கை கடற்படை. தற்போது கூட 83 மீனவர்கள், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
கடந்த 40 ஆண்டுகளில், 875க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கை கடற்படை தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வாரம் கூட, இராமேசுவரத்தை சேர்ந்த மீனவர் ஒருவர், இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளார். எனினும், படுகொலைகளை தடுக்க ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை” என்று குற்றம் சாட்டினார்.
தி.மு.க மக்களவை உறுப்பினர் கனிமொழி, “மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர். இந்த ஆண்டு 22 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. மொத்தம் 177 படகுகள் கைப்பற்றி வைத்துள்ளனர். நேற்று 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
எனினும், இதற்கான தக்க பதிலளிக்காமல் ஒன்றிய அரசு புறக்கணித்தது. இதனால், மாநிலங்களவையில் வைகோ தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!