India

”6 ஆண்டில் ரூ.448 கோடி லாபம் NTA” : உண்மையை வெளிச்சம்போட்டு காட்டிய ஜெய்ராம் ரமேஷ்!

நடப்பாண்டில் நடைபெற்ற நீட் இளநிலை தேர்வில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. பல கோடி லஞ்சம் கொடுத்து வினாத்தாள்கள் பெற்றதும், வினாத்தாள் கசிந்தது, ஆள் மாறாட்டம், கருணை மதிப்பெண் வழங்குதல் என பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் கைது செய்யப்ட்டுள்ளனர்.

இந்த முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, பேராசிரியகர்களுக்கான NET தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரமும் வெளியே வந்தது. தேசியத் தேர்வு முகமையால் (NTA))நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் முறைகேடு நடப்பது வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, NTA மீது நம்பகத்தன்மை இழந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 6 ஆண்டில் NTA ரூ.448 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "”நுழைவுத் தேர்வுகளை நடத்த மாணவர்களிடம் ரூ.3512.98 கோடியை NTA வசூலித்துள்ளது. இதில் ரூ.3064.77 கோடியை மட்டுமே செலவழித்துள்ளது. கடந்த 6 ஆண்டில் ரூ.448 கோடியை NTA லாபம் ஈட்டியுள்ளது. இந்த பணத்தில் இருந்து ஒரு ரூபாயை கூட முறைகேடுகளை தடுக்க NTA பயன்படுத்தவில்லை.” என தெரிவித்துள்ளார்.

Also Read: நீட் முதல் சட்டத் தேர்வு வரை... பாஜக அரசின் அலட்சியம்... கேள்விக்குறியாகும் தேர்வு நடைமுறைகள் !