India
10 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 5 வயது சிறுவன்... பீகார் பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி - நடந்தது ?
பாஜக கூட்டணி ஆளும் பீகாரின் சுபால் என்ற பகுதியில் Joan Boarding School என்ற தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் பலரும் பயின்று வரும் நிலையில், தற்போது அதில் ஒரு சிறுவன் மீது மற்றொரு சிறுவன் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த CBSE பள்ளியில் படிக்கும் 3-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன் வழக்கம்போல் தனது வகுப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது அவரது முன்பு வந்த 5 வயது சிறுவன், தனது கைப்பையில் இருந்து துப்பாக்கியை எடுத்துள்ளார். இதனை கண்டு அலறிய 3-ம் வகுப்பு மாணவன், அந்த சிறுவனை தடுக்க முயன்றுள்ளார். இருப்பினும் அந்த சிறுவன் துப்பாக்கியின் ட்ரிகரை அழுத்தவே, துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்துள்ளது.
இந்த விபத்தில் 5-ம் வகுப்பு மாணவனின் கையில் குண்டு பாய்ந்து இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருந்தார். துப்பாக்கி வெடி சத்தம் கேட்டு அங்கு வந்த ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட மாணவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, இதுகுறித்து போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் இதுகுறித்து விசாரணையை தொடங்கினர்.
பாதிக்கப்பட்ட மாணவனிடம் கேட்டபோது, சம்பவத்தை விவரித்த அவர், தனக்கும் அந்த சிறுவனுக்கும் எந்த வித பிரச்னையும் இல்லை என்றும் தெரிவித்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரிக்க பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிறுவனின் பெற்றோரிடமும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்ட சிறுவன், தனது கைப்பையில் துப்பாக்கியை மறைத்து வைத்து பள்ளிக்கு துப்பாக்கியை கொண்டு சென்ற நிலையில், இனி மாணவர்களின் பைகளை ஆசிரியர்கள் கட்டாயம் சோதனை செய்ய வேண்டும் என்றும் பிற பள்ளிகளுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிகழ்வால், பெற்றோர்கள் பலரும் பெரும் பயத்தில் உள்ளனர்.
Also Read
-
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
-
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!
-
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
-
உக்ரைனின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றியது ரஷ்யா : போரில் தொடரும் ரஷ்ய ஆதிக்கம் !
-
மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!