India

ரூ.35 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய பாஜக பிரமுகர்... இணையத்தில் வைரலாகும் படங்கள்!

போதைப்பொருள் விற்பனையில் பாஜக ஆளும் குஜராத்தான் டாப் 1-ல் உள்ளது. குஜராத்தில் தினந்தோறும் போதைப்பொருள் கடத்தல் விவகாரமாக யாராவது கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த கைது விவகாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது பாஜக பிரமுகர் அல்லது பாஜக பின்புலம் உடையவர்கள்தான். இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தற்போது ரூ.35 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய வழக்கில் மேலும் ஒரு பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத்தின் ராஜ்கோட் பகுதியில் கடந்த ஜூலை 22-ம் தேதி வழக்கம்போல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது விகாஸ் அஹிர் என்பவர் போதைப்பொருள் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக நடைபெற்ற சோதனையின்போது போலீசார் ராஜஸ்தானை சேர்ந்த சேத்தன் சாகு, சூரத்தை சேர்ந்த அனிஷ்கான் பதான், விகாஸ் அஹிர் என்ற 3 பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 90 கிராம் சுமார் ரு.35.49 லட்சம் மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்த போலிசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவர்களின் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், விகாஸ் அஹிர் ஐஸ்கிரீம், பான் பார்லர்களை நடத்தி, அதிலிருந்து போதைப்பொருள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், போதைப்பொருள் கடத்தலில் முக்கிய புள்ளியான விகாஸ் அஹிருக்கு பாஜகவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கிய ஹிந்து யுவ வாஹினி என்ற அமைப்பில் விகாஸ் குஜராத்தின் தலைவராகவும் தற்போது வரை உள்ளார். அவர் பாஜகவிலும் இருந்ததாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுகிறது. விகாஸ் மீது போதைப்பொருள் கடத்தல் மட்டுமின்றி ஆள் கடத்தல், மோதல், தாக்குதல் என 6 வெவ்வேறு பிரிவுகளில் வழக்கு உள்ளது.

மேலும் விகாஸ் அஹிர், யோகி ஆதித்யநாத், பாஜக அமைச்சர்கள், குஜராத்தின் உள்துறை அமைச்சர் என பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. போதைப்பொருள் விற்பனையில் பாஜக ஆளும் மாநிலம் மட்டுமல்ல பாஜகவே முதலிடத்தில் இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

பாஜகவில் ரௌடிகள், கொலையாளிகள், கொள்ளையர்கள், கஞ்சா கடத்தல் போன்ற பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களே அதிகம் உள்ளனர் என்பது மேலும் மேலும் நிரூபணமாகி வருகிறது.

Also Read: “ஒரு முதலமைச்சரை இப்படித்தான் நடத்துவதா?” - மம்தா அவமதிக்கப்பட்ட விவகாரம் - முதலமைச்சர் கண்டனம் !