India
பீகார், ஆந்திராவுக்கு கூடுதல் நிதி : பட்ஜெட்டில் வெளிப்பட்ட பா.ஜ.கவின் பயம்!
நாடாளுமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மை கிடைக்காததை அடுத்து நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோருடன் கூட்டணி வைத்துக் கொண்டு மூன்றாவது முறையாக பா.ஜ.க ஒன்றியத்தில் ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில், 2021-25 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பே கூட்டணி கட்சிகளின் மாநிலங்களுக்கு பல புதிய அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளது.
குறிப்பாக பீகாரில் வெள்ள பாதிப்புகளை தடுக்க 11,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேலும் பீகார் மாநிலத்துக்கு சாலை திட்டங்களுக்கு ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள கயா முதல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அம்ரிஸ்தர் வரை புதிய பொருளாதார வளர்ச்சி திட்டம் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது.
அதேபோல், ஆந்திரா மாநிலத்திற்கு விசாகப்பட்டினம் - சென்னை தொழில்பேட்டைக்கு கூடுதல் ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படுகின்றன. மேலும் ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ. 15 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காகவே பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு கூடுதலாக திட்டங்களையும், நிதிகளையும் ஒன்றிய பா.ஜ.க அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது பா.ஜ.கவின் பயத்தை காட்டுகிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!
-
“அகப்பட்டுக் கொண்டார் அதானி - பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?” : மோடியை வெளுத்து வாங்கிய முரசொலி!
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!